Nilgiris Heavy Rain: நீலகிரியை மிரட்டும் கனமழை... தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு... நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பொழிந்து வரும் கன மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பல மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பொழியக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பொழியக் கூடும் எனவும் அறிவித்திருந்தது. நீலகிரி மாவட்டத்திற்கு இன்றைய தினம் கன மழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்திருந்தார். இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஆவின் மில்க் ஷேக் வழங்கும் பள்ளி… இந்த Eat Right School பற்றி தெரியுமா..? மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையையொட்டி பேரிடர் மீட்புக் குழுவில் 80 பேர் நான்கு குழுக்களாகப் பிரிந்து அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரியில் நான்கு குழுக்கள், கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஊட்டி என அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் உள்ளனர். 42 மண்டல அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் அணையின் ஓரங்களில் உள்ள பொதுமக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். மேலும் இன்றைய தினம் ஊட்டி நகரப் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பொழிந்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பொழியும் மழையால் அதிகமான குளிர் நிலவுவதால் உள்ளூர் மக்கள் ஸ்வெட்டர், ஜெர்கின், மழை காகிதங்கள் மற்றும் குடையுடன் ஊட்டி நகரப் பகுதிகளில் வலம் வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரங்கோட்டில் 80மி.மீ மழையும், பந்தலூரில் 77மி.மீ மழையும், தேவலாவில் 74மி.மீ மழையும், ஓவேலியில் 61மி.மீ மழையும், மேல் கூடலூரில் 57மி.மீ மழையும், கூடலூரில் 54மி.மீ மழையும், குந்தாவில் 44மி.மீ மழையும், உதகையில் 20.02மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 970.2 மி.மீ மழையும், சராசரியாக 33.46 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 16, 2024
-
- December 16, 2024
-
- December 15, 2024
Featured News
Latest From This Week
Thread Garden: மணக்காத மலர் தோட்டம்... 6 கோடி மீட்டர் நூலில் உருவான அற்புதம்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சுட்டல்ல” அரிசியில் தத்ரூபமான ஓவியம் வடிக்கும் இளைஞர்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
Heavy Rain: கொட்டித் தீர்த்த கனமழை... மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி...
NILGIRIS
- by Sarkai Info
- December 2, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.