NILGIRIS

நீலகிரி கூட்டுறவுத் துறை தந்தைக்கு 131வது பிறந்த நாள் விழா.. மாலை அணிவித்து மரியாதை...

நீலகிரி கூட்டுறவுத் துறை தந்தைக்கு 131வது பிறந்த நாள் விழா.. மாலை அணிவித்து மரியாதை... நீலகிரி மாவட்டம், ஊட்டி ராவ் பகதூர் ஆரிகவுடர் வளாகத்தில் இன்று ராவ்பகதூர் H.B.ஆரிகவுடரின் 131ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. H.B.ஆரிகவுடர் படுக சமுதாயத்தின் முதல் பட்டதாரி, முதல் சட்டமன்ற உறுப்பினர், முதல் சட்டமேலவை உறுப்பினர், கூட்டுறவுத்துறையின் தந்தை, உதகை.என்.சி.எம்.எஸ் நிறுவனர், உதகை அரசு கலைக்கல்லூரியை உருவாக்கியவர், உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியை உருவாக்கியவர் ஆவார். ராவ்பகதூர். H.B.ஆரிகவுடர் 04-12-1893 அன்று உபதலை கிராமத்தில் பெள்ளிகவுடர் - நஞ்சி எத்தெ தம்பதியினரின் மகனாக பிறந்து, படுக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமில்லாமல், நீலகிரி விவசாயிகள் வளர்ச்சிக்கும் வித்திட்டு, என்.சி.எம்.எஸ் அமைப்பை உருவாக்கி, அது இன்று ஆலமரமாக மாறிட காரணமாக இருந்தார். இதையும் படிங்க: பார்வையற்றோருக்கு வழிகாட்டும் கருவி… அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு… இந்நிலையில் இன்று நடைபெற்ற அவரது 131ஆவது பிறந்தநாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். H.B.ஆரிகவுடரின் புகழைப் போற்றும் வகையில் சென்னை அண்ணாநகர், மேற்கு மாம்பலம் சாலைக்கு ராவ்பகதூர். ஆரிகவுடர் சாலை என பெயர் வைத்து தமிழக அரசு கவுரவித்தது. மேலும், தமிழ்நாடு - கார்நாடகா எல்லையினை பிரித்துக்காட்டும் விதமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் - பண்டிப்பூர் எல்லையில் ராவ்பகதூர்.ஆரிகவுடர் பெயரில் நுழைவு வளைவு அமைத்தும் கவுரவித்தது. இந்த விழா குறித்து விழா குழு தலைவர் மஞ்சை வி.மோகன் கூறுகையில், “பல ஆண்டு முயற்சிக்கு பின்னர் இந்த வளாகம் ஆரி கவுடர் வளாகமாகப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. கூட்டுறவுத் துறை மூலமாக விற்பனையில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்தவர் ஆரி கவுடர். அவரின் பிறந்த நாளில் விழாவைக் கொண்டாடுவது பெருமையாக உள்ளது. வரும் வருடங்களில் சிறப்பான முறையில் பல முன்னேற்றங்களைக் கூட்டுறவு நிறுவனம் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.