PUDUCHERRY

வரலாறு காணாத மழை : அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 5,000 நிவாரணம்..!!

புதுச்சேரியில் வெள்ள நிவாரணம் அறிவிப்பு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் மரக்காணம் புதுச்சேரி இடையே சனிக்கிழமை அன்று இரவு கரையை கடந்தது. அப்போது புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களையும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்துபுதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 48.4 செ,மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், மீட்பு பணியில்4 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் 2 பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் 70 துணை ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இந்த புயலால் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காணாமல் போய் உள்ளாதாகவும், இதில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தல ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் புயல் பாதிப்பு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல ரூ.5 ஆயிரமும், 10 ஆயிரம் ஹெக்டேர்பயிர்கள் பாதிக்கப்ட்டுள்ள நிலையில் ஹெக்டேருக்குரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றார். இதேபோல் உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.40 ஆயிரம் கிடாரி கன்றுகளுக்கு ரூ.20 ஆயிரமும், மீனவர்கள் சேதடைந்த படகுகளுக்கு ரூ.10 ஆயிரமும், சேதடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம், குறைவாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்றார். இதையும் வாசிக்க : சேலத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் தத்தளித்த கிராமம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம்காரணமாக பாகூர் பகுதிகள் சேதடைந்துள்ளன. வீடுர் அணை திறப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. நகரப்பகுதிகளில் 90 சதவிகித மின்சாரம் கொடுக்கப்பட்டு விட்டது. விரைவில் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். மேலும் மத்திய அரசிடம் முதல் கட்டமாக ரூ.100கோடி நிதி வழங்கக்கோரி உள்ளதாகவும், மேலும் மத்தியகுழு புதுச்சேரியில்பாதிப்புகளை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.