PUDUCHERRY

புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை

வெறிச்சோடி காணப்படும் கடற்கரை சாலை வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில், புதுச்சேரியில்கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது, கடல் அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு கரையை நோக்கி வந்தது.இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி ஏராளமானோர் கடலில் இறங்கி செல்பி எடுத்தும், விளையாடியும் மகிழ்ந்த நிலையில், அவர்களை கடற்கரை சாலையில் இருந்த போலீசார் எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.இதனிடையே பிற்பகல் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி கடல் சீற்றத்தை பார்வையிட்டார். Also Read: ‘ஃபெங்கல் புயல்’ .. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா..? காரணம் இதுதான்.! மேலும் சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் இறங்காதவாறு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், தேவைப்பட்டால் கடற்கரை சாலையை மூடவும் அறிவுறுத்தினார். முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக புதுச்சேரி கடற்கரை சாலையை மாலை முதல் காவல்துறையினர் முழுவதுமாக மூடினர். கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு யாரும் உள்ளே செல்லாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் கடற்கரை சாலைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை வெறிச்சோடி காணப்படும் கடற்கரை சாலை ஃபெங்கல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : November 28, 2024, 10:55 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில், புதுச்சேரியில்கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது, கடல் அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு கரையை நோக்கி வந்தது.இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி ஏராளமானோர் கடலில் இறங்கி செல்பி எடுத்தும், விளையாடியும் மகிழ்ந்த நிலையில், அவர்களை கடற்கரை சாலையில் இருந்த போலீசார் எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.இதனிடையே பிற்பகல் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி கடல் சீற்றத்தை பார்வையிட்டார். விளம்பரம் Also Read: ‘ஃபெங்கல் புயல்’ .. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா..? காரணம் இதுதான்.! மேலும் சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் இறங்காதவாறு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், தேவைப்பட்டால் கடற்கரை சாலையை மூடவும் அறிவுறுத்தினார். முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக புதுச்சேரி கடற்கரை சாலையை மாலை முதல் காவல்துறையினர் முழுவதுமாக மூடினர். கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு யாரும் உள்ளே செல்லாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் கடற்கரை சாலைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Cyclone , Local News , Puducherry First Published : November 28, 2024, 10:55 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.