PUDUCHERRY

மனைவியின் அந்தரங்க போட்டோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவன்... விசாரணையில் வெளியான ஷாக் தகவல்!

புதுச்சேரியில் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தார். அதில், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் கணவருடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் எனக்கும், எனது உறவினர்களுக்கும் யாரோ அனுப்பி உள்ளனர். ஆபாச புகைப்படங்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றால் என்னை ஒரு இடத்திற்கு தனிமையில் வரச்சொல்லி அந்த நபர் மிரட்டுகிறார். எனவே அந்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில், அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பப்பட்ட இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் அக்கவுண்டை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன. புகார் கொடுத்த பெண்ணின் இரண்டாவது கணவரே, தனது மனைவியின் புகைப்படங்களை அனுப்பி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். புகார் கொடுத்த முதல் பெண்ணின் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, பாண்டியனுக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து இருக்கிறார் அந்த பெண். இந்நிலையில் பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் வந்து மீண்டும் வாழச் சொல்லி மிரட்டிய பாண்டியன், இந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது. கணவன் - மனைவி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியபோது தனிமையில் இருந்த புகைப்படங்களை ஜாலிக்காக எடுத்துள்ளனர். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்தே பாண்டியன் மிரட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திண்டிவனத்தில் பதுங்கி இருந்த பாண்டியனை கைது செய்த போலீசார், ஆபாச புகைப்படங்கள் அனுப்புவதற்கு பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பாண்டியனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தனிப்பட்ட புகைப்படங்கள் எடுக்கும் பெண்களும், மற்றவர்களை எடுக்க அனுமதிக்கும் பெண்களும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கணவனே மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் பரவ விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.