PUDUCHERRY

துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்

புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் இருந்துவந்தது. ஆனால், இதற்கு பொதுமக்கள் இடையே கடும் கண்டனம் எழுந்தது. இதனால், அது சில மாதங்களிலேயே கைவிடப்பட்டது. பிறகு 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டாய தலைக்கவசம் என புதுச்சேரி அரசு அறிவித்து அது நடைமுறைக்கு வந்தது. அப்போதே தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில், பல்வேறு தரப்பினரும் இதனை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தினர். அதனை அடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் பெரிதாக தலைக்கவசம் குறித்து கண்டுக்கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில், மீண்டும் கட்டாயம் தலைக்கவசம் கொண்டுவர முடிவு செய்து அதற்கான அறிவிப்பை புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், புதுச்சேரியில் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பின் இருக்கையில் அமருபவர்களுக்கு தலைக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாகவும், மீறுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டினால், மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / புதுச்சேரி / துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ் துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புது ரூல்ஸ் நடைமுறைக்கு வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 18, 2024, 8:07 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் இருந்துவந்தது. ஆனால், இதற்கு பொதுமக்கள் இடையே கடும் கண்டனம் எழுந்தது. இதனால், அது சில மாதங்களிலேயே கைவிடப்பட்டது. பிறகு 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டாய தலைக்கவசம் என புதுச்சேரி அரசு அறிவித்து அது நடைமுறைக்கு வந்தது. அப்போதே தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில், பல்வேறு தரப்பினரும் இதனை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தினர். அதனை அடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் பெரிதாக தலைக்கவசம் குறித்து கண்டுக்கொள்ளாமல் இருந்தனர். விளம்பரம் இந்நிலையில், மீண்டும் கட்டாயம் தலைக்கவசம் கொண்டுவர முடிவு செய்து அதற்கான அறிவிப்பை புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், புதுச்சேரியில் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பின் இருக்கையில் அமருபவர்களுக்கு தலைக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாகவும், மீறுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டினால், மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , pondicherry First Published : December 18, 2024, 8:07 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.