PUDUCHERRY

புதுச்சேரியில் கனமழை... மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரே நாளில் 48.45 சென்டிமீட்டர் மழை பதிவாகி புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் முக்கிய பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதிலிருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (13ஆம் தேதி) புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. எனவே புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் அவர்களது படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கனமழை... மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை புதுச்சேரியில் கனமழை... மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி இருந்த நிலையில் படகுகளை பத்திரமாக துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 13, 2024, 4:49 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரே நாளில் 48.45 சென்டிமீட்டர் மழை பதிவாகி புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் முக்கிய பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதிலிருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (13ஆம் தேதி) புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. விளம்பரம் எனவே புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் அவர்களது படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Puducherry First Published : December 13, 2024, 4:49 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.