PUDUCHERRY

மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்

கடல் போல் காட்சி அளிக்கும் உப்பளங்கள். மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவிட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதலே மேக மூட்டங்களுடன் மிதமான மழை பெய்யத் துவங்கியது. இதனைத் தொடர்ந்துகருமேகங்கள் சூழ்ந்து, மழையின் வேகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த மழை இரவு முழுக்க கொட்டித் தீர்த்தது. இதனால் மரக்காணம் பகுதியில் ஒரே நாளில்11சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதுபோல் பெய்த கனமழையால் பக்கிங் காம் கால்வாயில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மூழ்கி, தற்பொழுது பெரிய கடல் போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள் மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள் கடல் போல் காட்சி அளிக்கும் உப்பளங்கள். மரக்காணம் பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையில் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : November 28, 2024, 2:28 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவிட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதலே மேக மூட்டங்களுடன் மிதமான மழை பெய்யத் துவங்கியது. இதனைத் தொடர்ந்துகருமேகங்கள் சூழ்ந்து, மழையின் வேகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த மழை இரவு முழுக்க கொட்டித் தீர்த்தது. இதனால் மரக்காணம் பகுதியில் ஒரே நாளில்11சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதுபோல் பெய்த கனமழையால் பக்கிங் காம் கால்வாயில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மூழ்கி, தற்பொழுது பெரிய கடல் போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : November 28, 2024, 2:28 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.