PUDUCHERRY

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு டஃப் கொடுக்கும் பாகூர் பிரீமியர் லீக் ஏலம்...!!

கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் காட்சி கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமானதாக ஐபிஎல் மற்றும் தமிழகத்தின் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உள்ளன. அந்த வகையில் புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் பாகூர் கிராமத்தில் பாகூர் பிரீமியர் லீக் சீசன் 2 என்ற கிரிக்கெட் போட்டிகள் முதல் முறையாக நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக துவங்க உள்ள இந்த லீக் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுக்கும் முறை நடைபெற்றது. எட்டு அணிகள் பிரிக்கப்பட்டு அந்தந்த அணிகளுக்கு உரிமையாளர்களாக பாகூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அணியின் உரிமையாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஐபிஎல் போட்டியில் ஏலம் கேட்பது போல் எட்டு அணி உரிமையாளரும், வட்டமேசை அமைத்து ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயர் சொல்ல சொல்ல அவர்கள் பெயரை போர்டில் எழுதி வைத்து அந்தந்த அணிகள் ஏலம் எடுத்தனர். சுமார் 4 லட்சம் செலவில் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக ரூ.10,000, ரூ.15,000, ரூ.8000, ரூ.6000 என்று கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிகபட்சமாக ஏலமாக எடுக்கப்பட்டனர். இதற்கான போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 12 ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை மொத்தம் எட்டு நாட்கள் மிக பெரிய அளவில் நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவிற்கு வீரர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார். மற்றும் இவ்விழாவினை BPL குழுவினர் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர். இதையும் வாசிக்க : பட்டுக்கூடு உற்பத்தி விவசாயத்தில் நாங்க தான் “கிங்” : தமிழக அரசு விருது பெற்ற சேலம் பெண்..!! இது குறித்து விழாக்குழுவினர் கூறியதாவது, “இம்முயற்சி கிராமப் பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களையும் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்க வைப்பது, இதற்கான ஒரு சிறிய முயற்சியாககிராமப்புற விளையாட்டு வீரர்களின் நலனுக்காக இந்த BPL போட்டி துவங்கப்பட்டுள்ளது” என்றார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.