AUTOMOBILE

ஹுண்டாயின் சிறிய ரக SUV எலெக்ட்ரிக் காரில் என்னென்ன வசதிகள் இருக்கு?

2024ம் ஆண்டின் பூசான் சர்வதேச வாகன கண்காட்சியில் சிறிய ரக எலெக்ட்ரிக் SUV காரான Inster-ஐ ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனித்துவமான டிஸைன், ஆச்சர்யமூட்டும் ரேஞ்ச், தங்குதடையற்ற கனெக்டிவிட்டி, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை இந்த காரில் உள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 355 கி.மீ. வரை தடையில்லாமல் இந்த கார் செல்லுமாம். ஹூண்டாய் Inster எலக்ட்ரிக் காரின் டிஸைன், சிறப்பம்சங்கள் வெளிப்புறத்தில் வலுவான கட்டமைப்புடனும், உட்புறத்தில் அதிக இட வசதியுடனும் எதிர்கால நோக்கில் இந்த கார் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. இது காம்பேக்ட் SUV என்பதால் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு கச்சிதமாக இருக்கும். சன்ரூஃப், பகல் நேரத்தில் எரியும் LED லைட், புரொஜெக்ஷன் ஹெட்லைட், மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள், வலுவான ஸ்கிட் பிளேட், வலுவான தடுப்புகள், அதிநவீன சர்க்குயூட் போர்ட் பம்பர் போன்ற பல வசதிகள் இந்தக் காரில் உள்ளன. இது காம்பேக்ட் SUV என்றாலும், காரின் உள்ளே நல்ல இடவசதி வசதி உள்ளது. மேலும் வீல்பேஸ் உயரமாக இருப்பதால் மேடு பள்ளங்களில் சிறப்பாக செயல்படுகிறது. காரின் சக்கரங்களைப் பொறுத்தவரை 15 இன்ச் ஸ்டீல் கவர் முதல் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. காரின் கேபினுள்ளே பார்த்தோமென்றால், 10.25 இன்ச் டிஜிட்டல் க்ளஸ்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, வயர்லஸ் சார்ஜிங், ஸ்டைலிஷான ஸ்டீரிங் வீல் ஆகியவை Inster காரின் அதிநவீன தோற்றத்தை உறுதிபடுத்துகின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் மேலும் சில வசதிகளை கூட தங்களுக்கு ஏற்ற வகையில் இந்தக் காரில் மாற்றிக்கொள்ளும் ஆப்ஷன் உள்ளது. ஓட்டுனர் இருக்கை உட்பட அனைத்து இருக்கைகளையும் நம் தேவைக்கேற்ப மடக்கிக் கொள்ளலாம். இதையும் படிக்க: இந்தியாவில் வெளியாகும் வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டர்! விலை விவரம் பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச் ஹூண்டாய் Inster எலெக்ட்ரிக் காரில் இரண்டு பேட்டரி ஆப்ஷன் உள்ளது. ஒன்று, 42 kWh திறனுள்ள ஸ்டாண்டர்டு பேட்டரி, இன்னொன்று 49 kWh திறனுள்ள லாங் ரேஞ்ச் பேட்டரி. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 355 கி.மீ. வரை ரேஞ்ச் தருகிறது. அதுமட்டுமின்றி 10 முதல் 80 சதவிகித சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் ஏற்றிவிடலாம். சார்ஜ் செய்வதற்கு வசதியாக 11 Kw சார்ஜர் தரப்படுகிறது. Inster எலக்ட்ரிக் காரில் உள்ள வசதிகள் ADAS, சுற்றுப்புறத்தை பார்க்கும் மானிடர் (SVM), பார்க்கிங்கின்போது மோதலை தடுக்கும் வசதி (PCA-R), BVM, முன்புறம் மோதலை தவிர்க்கும் வசதி (FCA 1.5) போன்ற பாதுகாப்பு வசதிகள் இந்தக் காரில் உள்ளன. அதுமட்டுமின்றி லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் ஃபாலோயிங் அசிஸ்ட், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஹைவே டிரைவிங் அசிஸ்ட், ஸ்பீடு லிமிட் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், ADAS பார்க்கிங் சிஸ்டம், ரீயர் வீயூ மிரர் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இந்த எலெக்ட்ரிக் காரில் உள்ளன. இதையும் படிக்க: எல்லா ரோடுகளிலும் இயக்க சிறந்த 5 எஸ்யூவி கார்களின் பட்டியல் இதோ முதலில் கொரியாவில் Inster எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. இப்போதைக்கு இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எனினும் Inster அடிப்படையில் அமைந்த எக்ஸ்டர் எலெக்ட்ரிக் கார், டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் காருக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. 2025ம் ஆண்டில் எக்ஸ்டர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.