AUTOMOBILE

ஸ்பெஷல் 100% கேஷ்பேக் ஆஃபருடன் கிடைக்கும் TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.... டிசம்பர் 22ஆம் தேதி தான் கடைசி தேதி...

நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும். ஏனென்றால் டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான TVS iQube-ற்கு ஸ்பெஷல் ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பர் 12-ஆம் தேதி துவங்கிய ‘டிவிஎஸ் ஐக்யூப் மிட்நைட் கார்னிவல்’ இன்னும் சில தினங்களில் அதாவது டிசம்பர் 22ஆம் தேதி இரவு 11:59 மணி வரை மட்டுமே இருக்கும். இந்த 10 நாட்கள் ஈவன்ட்டானது வாடிக்கையாளர்கள் TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் 100% கேஷ்பேக்கை வெல்வதற்கான அருமையான வாய்ப்பை வழங்குகிறது. டிவிஎஸ் நிறுவனம் இதுவரை இந்தியாவில் இந்த பிரபலமான EV ஸ்கூட்டரின் சுமார் 4.5 லட்சம் யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது. இதை நினைவுகூறும் வகையில்தான், இந்த ஸ்பெஷல் ஈவன்ட்டை நடத்துகிறது. TVS iQube ஸ்கூட்டரானது 2.2 kWh, 3.4 kWh மற்றும் 5.1 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு பல வேரியன்ட்ஸ்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சத்தில் தொடங்கி, ரூ.1.85 லட்சம் வரை செல்கிறது. இந்த மாடலின் வேரியன்ட்டை பொறுத்து ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கி.மீ. முதல் 150 கி.மீ. வரையிலான ரேஞ்சை வழங்குகிறது. Midnight Carnival ஆஃபர் எப்படி செயல்படுகிறது.? மிட்நைட் கார்னிவலின்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் ஒரு அதிர்ஷ்டசாலி தினசரி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்வு செய்யப்படும் நபர் பணம் வாங்கியதில் முழு கேஷ்பேக்கையும் பெறுவார்கள். TVS டீலர்ஷிப்கள் அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: உங்க காருக்கு இன்சூரன்ஸ் பண்ணப்போறீங்களா..? அப்ப இந்த விஷயத்தை ஞாபகம் வச்சிக்கோங்க! இந்த ஆஃபருக்கு ஏதுவாக இந்த ஈவன்ட்டில் பங்கேற்கும் டீலர்ஷிப்கள் தங்கள் ஆப்ரேட்டிங் நேரத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்யும். அதுமட்டுமின்றி இந்த பிரச்சாரத்திற்கு முன் தங்கள் iQube-ஐ முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களும் கூட இந்த ஆஃபர் ஈவன்ட்டில் பங்கேற்கலாம். எனினும் ஈவன்ட்டின்போது அவர்கள் வாங்குவதை முடித்திருந்தால், இந்த EV ஸ்கூட்டரை வாங்குபவர்கள் ரூ.30,000 வரை உறுதி செய்யப்பட்ட பலன்களையும் அனுபவிக்க முடியும். இதையும் படிக்க: Kawasaki Bikes: கவாஸாகி பைக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடி.. முழுமையான விவரங்கள் இதோ! இதில் 3.4 kWh வேரியன்ட்ட்டிற்கு 5 ஆண்டுகள் / 70,000 கி.மீ. மற்றும் 2.2 kWh வேரியன்ட்டிற்கு 5 ஆண்டுகள்/50,000 கி.மீ. இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் பெறலாம். Tvs iqube-ஐ வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டீலர்ஷிப்பை அணுகலாம் அல்லது இந்த ஸ்பெஷல் ஈவன்ட்டில் பங்கேற்க அதிகாரப்பூர்வ TVS iQube வெப்சைட்டை பார்வையிடலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.