AUTOMOBILE

இந்தியாவில் அதிகம் விற்பனையாகியுள்ள எஸ்யூவிக்கள்.. டாப் 10 பட்டியல் இதோ!

இந்த ஆண்டு ஜனவரி-நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டில் அதிகம் விற்பனையாகி இருக்கும் எஸ்யூவியாக அனைத்து மாடல்களையும் பின்னுக்குத் தள்ளி டாடா பஞ்ச் முன்னணியில் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் மொத்தம் டாடா பஞ்ச் மாடலின் 1,86,958 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாடா பஞ்ச் மாடலின் அதிக யூனிட்ஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மைக்ரோ எஸ்யூவி-யின் 1,50,182 யூனிட்ஸ்களை நிறுவனம் விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நிபுணர்களின் கூற்றுப்படி டாடா பஞ்ச் கார் பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க மாடல்களில் ஒன்றாகும். இது இன்டர்னல் கம்ப்யூஷன் எஞ்சின் (ICE) மற்றும் மின்சார வாகனம் (EV) உள்ளிட்ட வெர்ஷன்களில் கிடைக்கிறது. இது ஒரு என்ட்ரி-லெவல் எஸ்யூவி-க்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது மிகவும் மலிவு விலையில் பல அம்சங்களுடன் கிடைக்க கூடிய மாடலாக உள்ளது. டாடா பஞ்சின் ICE வெர்ஷனில் 88PS அதிகபட்ச ஆற்றல் மற்றும் 115Nm பீக் டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 5-ஸ்பீட் MT மற்றும் 5-ஸ்பீட் AMT ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் CNG வெர்ஷன் 73PS பவர் மற்றும் 103Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் மற்றும் இது 5-ஸ்பீட் MT உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சிஎன்ஜி மாடல் ட்வின் கேஸ் டேங்க்குகளை பயன்படுத்துகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Punch.ev இரண்டு வேரியன்ட்ஸ்களை கொண்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியன்ட் 60kW மோட்டார் (114Nm), 25kWh பேட்டரி பேக் மற்றும் 315km க்ளைம்ட் ரேஞ்சுடன் வருகிறது. மற்றொரு வேரியன்ட் 90kW மோட்டார் (190Nm), 35kWh பேட்டரி பேக் மற்றும் 421km க்ளைம்ட் ரேஞ்சுடன் வருகிறது. இந்த காரின் ICE வெர்ஷனில் ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ், 16-இன்ச் அலாய்ஸ், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆட்டோமேட்டில் கிளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் உள்ளன. டாடா பஞ்ச்-ன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்ஸ், 10-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்படட் நேவிகேஷன் வியூ, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ZConnect கார் டெக்னாலஜி, 6 ஏர்பேக்ஸ் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் கூடிய 360-டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா சிஸ்டம் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இந்த காரின் ICE வெர்ஷனானது குளோபல் NCAP-ல் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற அதே நேரம் இந்த EV பாரத் NCAP-யிலும் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. டாடா பஞ்ச் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.13 லட்சத்தில் தொடங்கி ரூ.10.15 லட்சம் வரை செல்கிறது. Tata Punch.ev-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.14.29 லட்சம் வரை உள்ளது. ஜனவரி - நவம்பர் 2024-ல் அதிகம் விற்பனையாகியுள்ள 10 எஸ்யூவி பட்டியல்: டாடா பஞ்ச் - 1,86,958 யூனிட்ஸ் ஹூண்டாய் க்ரெட்டா - 1,74,311 யூனிட்ஸ் மாருதி சுசுகி பிரெஸ்ஸா - 1,70,824 யூனிட்ஸ் மஹிந்திரா ஸ்கார்பியோ - 1,54,169 யூனிட்ஸ் டாடா நெக்ஸான் - 1,48,075 யூனிட்ஸ் மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் - 1,45,484 யூனிட்ஸ் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா - 1,15,654 யூனிட்ஸ் ஹூண்டாய் வென்யு - 1,07,554 யூனிட்ஸ் கியா சோனெட் - 1,03,353 யூனிட்ஸ் மஹிந்திரா பொலேரோ - 91,063 யூனிட்ஸ். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.