AUTOMOBILE

Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்வை அறிவித்துள்ள ஏத்தர் நிறுவனம் - ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்....

மின்சார வாகன நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் ஏத்தர், அதன் சமீபத்திய புதிய மாடலான ரிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று ஏத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட விலை உயர்வுக்குப் பிறகு, ஏத்தர் ரிஸ்ட்டாவின் தற்போதைய விலையில் இருந்து ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் ரிஸ்ட்டா முழு விவரம் ஏதர் ரிஸ்ட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ரூ.1.10 லட்சத்தில் தொடங்கும் இதன் விலை ரூ.1.46 லட்சம் வரை செல்கிறது. ரிஸ்ட்டாவின் எஸ் வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1.10 லட்சம் மற்றும் ரிஸ்ட்டாவின் இசட் 2.9 வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1.27 லட்சத்திற்கும், ரிஸ்ட்டாவின் இசட் 3.7 வகையின் விலை ரூ.1.46 லட்சத்திற்கும் கிடைக்கிறது. இதில், பயனர்கள் ப்ரோ பேக்கைத் தேர்வு செய்யும் பட்சத்தில், ஸ்கூட்டரில் இன்னும் நிறைய அம்சங்களைப் பெற முடியும். இந்த மூன்று வகைகளில் ப்ரோ பேக்கை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.13,000, ரூ.15,000 மற்றும் ரூ.20,000 என அந்த மாடலுக்கு ஏற்ப கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஏத்தர் ரிஸ்ட்டாவின் விலை ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை கூடப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு குறிப்பிட்ட வேரியண்டின் தனித்தனி விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. ஏத்தரின் இந்த ரிஸ்ட்டா மாடல், குடும்பங்களை மையமாக வைத்து அதற்கேற்ப வடிமைக்கப்பட்டுள்ளது. 450ல் பேட்டரி, மோட்டார், மெயின் ஃப்ரேம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற அம்சங்களை ரிஸ்ட்டா பெறுகிறது. மறுபுறம், ஃபிளாக்ஷிப் 450 அபெக்ஸில் வழங்கப்பட்ட மேஜிக் ட்விஸ்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ரிஸ்ட்டாவுக்கு கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது மற்றும் இது வலுவான மற்றும் நிலையான தொடர்பையும் உறுதி செய்கிறது. இதையும் படிக்க: ஸ்பெஷல் 100% கேஷ்பேக் ஆஃபருடன் கிடைக்கும் TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. டிசம்பர் 22ஆம் தேதி தான் கடைசி தேதி… விலையை பொறுத்தவரையில், ​​சமீபத்திய விலை உயர்வு இந்த மின்சார ஸ்கூட்டரை இன்னும் அதிக பிரீமியமாக்குகிறது. இதை பிரீமியம் என்று குறிப்பிடுவதற்கான காரணம் என்னவென்றால், பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ போன்ற முன்னணி வாகன நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஏத்தரின் இந்த ஸ்கூட்டரின் விலை அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். எனினும், ஸ்கூட்டர்களின் இந்த விலை உயர்வை நிறுவனம் எவ்வாறு கையாள்கிறது (விலை உயர்வுக்குப் பிறகு) என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.