AUTOMOBILE

ஸ்கூட்டர் வாங்க செம ஆஃபர்.. பியாகியோ அறிவித்த சூப்பர் சலுகைகள்

பியாகியோ இந்தியா (Piaggio India) நிறுவனம் தனது ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் அப்ரிலியா (Aprilia) மற்றும் வெஸ்பா (Vespa) ஆகிய ஸ்கூட்டர்களுக்கு ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகையின் ஒரு பகுதியாக ரூ.13,000 வரை விலை குறைப்பை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர்களுக்கான சலுகைகள் கிறிஸ்துமஸ் வரை அதாவது வரும் டிசம்பர் 25, 2024 வரை செல்லுபடியாகும். அதேசமயம் Aprilia RS 457 ஸ்கூட்டருக்கான விலை குறைப்பு சலுகை மட்டும் வரும் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், ஒவ்வொரு குறிப்பிட்ட ஸ்கூட்டர் மாடலுக்கும் குறிப்பிட்ட தள்ளுபடி தொகை குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. Piaggio India இரு சக்கர வாகனப் பிரிவில் வெஸ்பா மற்றும் அப்ரிலியா என இரண்டு பிராண்டுகளைக் கொண்டுள்ளது. வெஸ்பா ரெட்ரோ-ஸ்டைல் ​​ஸ்கூட்டர்களை வழங்கும் அதேசமயம், அப்ரிலியா ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கும் ஸ்கூட்டர்களை வழங்குகிறது. நிறுவனம் ஐந்து வெஸ்பா மற்றும் ஐந்து அப்ரிலியா ஸ்கூட்டர்களை தற்போது இந்தியாவில் விற்பனை செய்கிறது. இரண்டு ஸ்கூட்டர் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.13,000 தள்ளுபடியானது முழு ரொக்க தள்ளுபடியாக இருக்கலாம் அல்லது இலவச காப்பீடு அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை உள்ளடக்கியதாக இருக்கலாம். மாடல் மற்றும் டீலர்ஷிப்பின் இருப்பிடத்தின் அடிப்படையில் சலுகைகளும் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும். பொதுவாக ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் இரு சக்கர வாகனம் வாங்குவது எப்போதுமே சிறந்த யோசனையாகும். ஏனென்றால் ஆண்டு இறுதி தள்ளுபடியின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தில் குறைந்த விலையில் இரு சக்கர வாகனங்களை பெறலாம். ஆனால், வாங்குவதற்கு முன் தள்ளுபடியின் முழு விவரங்களையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். நீங்கள் Vespa அல்லது அப்ரிலியா ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்வது நல்லது. இது மாடலின் விலைகள் மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்களை உங்களுக்கு வழங்கும். இதனிடையே Piaggio India நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 2025 முதல் Aprilia RS 457 பைக்கின் விலை உயர்த்தப்படும் என்று கூறி இருக்கிறது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.10,000 அதிகரிப்பு இருக்கும். அதாவது RS 457-ன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4,20,000-ஆக இருக்கும். அடுத்த ஆண்டு விலை உயர்த்தப்பட்டாலும் கூட Aprilia RS 457 பைக்கானது அதன் போட்டியாளர்களை விட அப்போதும் மலிவு விலையில் தான் இருக்கும். Aprilia RS 457 ஆனது Yamaha R3 மற்றும் Kawasaki Ninja 500 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கிறது. இந்த 3 பைக்குகளுமே பேர்லல்-ட்வின் எஞ்சின் லேஅவுட்டை கொண்டுள்ளன. ஜப்பானை சேர்ந்த Yamaha மற்றும் Kawasaki ஆகிய இரண்டு ஓப்பிடும் போது Aprilia உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கண்ட இரண்டு ஜப்பானிய தயாரிப்புகளும் CBU-க்களாக இருப்பதால் அவற்றின் விலை பிரீமியத்தில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. RS 457 மற்ற 2 பைக்குகளை ஒப்பிடும் போது சிறந்த பவர் மற்றும் அம்சங்களின் பட்டியலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் Aprilia RS 457 பைக்கானது தற்போது இந்த ஆண்டு இறுதி வரை ரூ.5,000 தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. இந்த சலுகை 31 டிசம்பர் 2024 வரை செல்லுபடியாகும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.