AUTOMOBILE

கார்களின் விலையை உயர்த்த உள்ள மஹிந்திரா, எம்ஜி நிறுவனங்கள்.. என்ன காரணம் தெரியுமா?

மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களும், அவற்றினுடைய வாகனங்களின் விலையை உயர்த்த போகும் கார் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளன. சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி M&M மற்றும் JSW MG மோட்டார் ஆகிய நிறுவனங்கள் வரும் ஜனவரி 2025 முதல், தங்களின் தயாரிப்புகளினுடைய விலையை மூன்று சதவீதம் வரை உயர்த்த உள்ளன. மேற்கண்ட இந்த 2 பிராண்டுகளை தவிர மாருதி சுசுகி, டொயோட்டா, மெர்சிடிஸ் பென்ஸ், ஹூண்டாய், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களும் புதிய காலண்டர் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்புகளின் விலை உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர். வரவிருக்கும் விலை அதிகரிப்புக்கு பணவீக்கம் மற்றும் அதிகரித்த பொருட்களின் விலைகளே காரணம் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனங்களை உற்பத்தி செய்ய அதிகரித்து வரும் செலவுகளை கருத்தில் கொண்டு வரும் 2025 ஜனவரி முதல் விலை 3 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல JSW குழுமத்தின் கீழ் உள்ள MG Motor India, தனது வாகன வரிசை முழுவதும் விலை உயர்வை அறிவித்துள்ளது. 3% வரை விலை அதிகரிப்பு இருக்கும் என்றும் ஜனவரி 1, 2025 முதல் புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் வெளிப்புற பொருளாதார அழுத்தங்கள் காரணமாக இந்த விலை அதிகரிக்கும் முடிவை MG Motor India நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. JSW MG Motor நிறுவனம் தற்போது இந்தியாவில் Comet EV, Astor, Windsor EV, Hector, Hector Plus, ZS EV மற்றும் Gloster என மொத்தம் ஏழு மாடல்களை விற்பனை செய்கிறது. அதே போல நிறுவனம் சமீபத்தில் MG சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்தது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ள MG Cyberster மாடல் முதன்முதலில் 2021-ல் வெளியிடப்பட்டது மற்றும் 2023 குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் வாகனமானது DRLs-களுடன் கூடிய நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்ஸ், ஸ்கல்ப்டட் பானட் மற்றும் ஸ்பிலிட் ஏர் இன்டேக் ஆகியவற்றை கொண்டுள்ளது. சைபர்ஸ்டரின் சைட் ப்ரோஃபைலில் 19 முதல் 20 அங்குலங்கள் வரையிலான டயமண்ட்-கட் அலாய் வீல்ஸ் கொண்ட ஷார்ப் கட்ஸ்கள் உள்ளன. வெளிநாடுகளில் சைபர்ஸ்டர் மாடல் இரண்டு பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இதன் என்ட்ரி-லெவல் வேரியன்ட்டில் 64kWh பேட்டரி மற்றும் சிங்கிள் 308 hp ரியர் ஆக்ஸசில்-மவுன்ட்டட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது, இது 520 கிமீ ரேஞ்சை வழங்கும். ஹை-என்ட் வேரியன்ட் 77kWh பேட்டரி, 535 hp மற்றும் 725Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் டூயல் மோட்டார்ஸை கொண்டிருக்கிறது. மேலும் 3.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் இது 580 கிமீ ரேஞ்சை வழங்க கூடியது. இந்த இரண்டில் எந்த வேரியன்ட் இந்தியாவில் அறிமுககமாகும் என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை. இருப்பினும், இந்த பிராண்ட் 77 kWh பேட்டரி பேக்குடன் டாப்-ஆஃப்-லைன் டூயல் மோட்டார் வேரியன்ட்டை இங்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா பற்றி பார்த்தால் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Be 6 மற்றும் XEV 9e EV-க்களை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு தயாரிப்புகளும் சிறந்த விலை, தனித்துவமான எதிர்கால வடிவமைப்பு, அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவை மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. பேக் ஒன் எனப்படும் XEV 9e மற்றும் Be 6 இன் அடிப்படை டிரிம்களுக்கான விலையை மட்டுமே மஹிந்திரா அறிவித்துள்ளது, இதில் சார்ஜர் சேர்க்கப்படவில்லை மற்றும் தனித்தனியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. இதில் XEV 9e மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 21.9 லட்சம் மற்றும் Be 6 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.9 லட்சம். இரண்டு வேரியன்ட்ஸ்களும் சிறிய 59kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.