AUTOMOBILE

இந்தியாவில் அறிமுகமாகும் எம்ஜி சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர்.... விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன...?

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அதிவேக எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் எம்ஜி சைபர்ஸ்டரை ஜனவரி 2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எம்ஜி சைபர்ஸ்டர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் இது நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். நிறுவனம் இந்த காரை அதன் பிரீமியம் எம்ஜி செலக்ட் ரீடெயில் சேனல் மூலம் விற்பனை செய்யும். சில மாதங்களுக்கு முன்பு, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா, அதன் அதிக பிரீமியம் தயாரிப்புகளுக்காக எம்ஜி செலக்ட் என்ற புதிய ரீடெயில் சேனலை அறிவித்தது. இந்த டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யப்படும் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சைபர்ஸ்டர் இருக்கப் போகிறது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், முதலில் நாடு முழுவதும் 12 தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிரியன்ஸ் சென்டர்களைக் கொண்டிருக்கும். மேலும், அது படிப்படியாக சேர்க்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சைபர்ஸ்டர் 2023 குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் அறிமுகமானது மற்றும் இதற்கு முன்பு 2021இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. எம்ஜி சைபர்ஸ்டர் ஆனது எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. அதன் அளவைப் பற்றி பேசுகையில், இது 4,533 மிமீ நீளம், 1,912 மிமீ அகலம் மற்றும் 1,328 மிமீ உயரம் மற்றும் 2,689 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. காரின் உள்ளே டிரைவரின் முன் வெர்டிகளாக வைக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட மூன்று ஸ்கிரீன்களைக் கொண்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்-பில்ட் 5ஜி, கனெக்டடு கார் டெக், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் சோன் கிளைமேட், வென்டிலேடட் சீட்கள் மற்றும் பிரீமியம் போஸ் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இது தவிர, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8155 சிப், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், மல்டிபில் ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS மற்றும் பலவற்றை வழங்குகிறது. இதையும் படிக்க: 2024 நவம்பரில் உள்நாட்டில் 47,063 யூனிட்ஸ் விற்பனையை பதிவு செய்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம்… இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் பல சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு உள்ளது மற்றும் பேட்டரி பேக் மற்றும் மோட்டாருக்கு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. என்ட்ரி லெவல் மாடலில் சிங்கள் ரியர்-ஆக்ஸி பொருத்தப்பட்ட 308hp மோட்டார் உள்ளது. இந்த காரில் 64kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது அதிகபட்சமாக 520கிமீ தூரம் வரை செல்லும். ரேஞ்ச்-டாப்பிங் சைபர்ஸ்டர் 77kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது, இது CLTC-மதிப்பிடப்பட்ட 580km வரம்பைக் கொண்டுள்ளது. இது 544hp பவரையும், 725Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் இரண்டு மின்சார மோட்டார்களின் அமைப்பைக் கொண்டுள்ளது. சைபர்ஸ்டர் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக இந்தியாவிற்கு வரும். விலையைப் பற்றி பேசுகையில், இதன் விலை ரூ.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.