AUTOMOBILE

KTM 250 Duke பைக் வாங்கப் போறீங்களா..? அப்ப உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்..!

இந்தியாவில் சமீபத்தில் KTM நிறுவனம் அதன் பெரிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது இந்த ஆண்டின் முடிவில் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக நிறுவனம் அதன் பிரபலமான KTM 250 Duke மோட்டார் சைக்கிளுக்கு ஆண்டு இறுதியில் ரூ.20,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.45 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக குறைந்துள்ளது. இருப்பினும் இந்த சிறப்பு விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும். அதாவது வரும் டிசம்பர் 31 வரை அல்லது ஸ்டாக்ஸ் இருக்கும் வரை மட்டுமே இந்த சிறப்பு விலையில் KTM 250 Duke பைக் கிடைக்கும். சமீபத்திய அப்டேட்ஸ்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன், இந்த சிறப்பு விலை இந்த பைக் மாடலை வாங்குவது குறித்து பரிசீலிக்க நல்ல நேரமாக இருக்கிறது. KTM 250 Duke பைக்கானது நிறுவனத்தின் மற்றொரு மாடலான 390 Duke-ஆல் ஈர்க்கப்பட்ட சில அப்டேட்ஸ்களை சமீபத்தில் பெற்றது. தற்போது KTM 250 Duke மாடலானது பூமராங் வடிவ LED DRLகளுடன் கூடிய ஹெட்லேம்பைக் கொண்டுள்ளது. இது ஷார்ப் மற்றும் மாடர்ன் லுக்கை பைக்கிற்கு அளிக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் 5.0-இன்ச் ஃபுல்-கலர் TFT டிஸ்ப்ளே உள்ளது. மேலும் புதுப்பித்த கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கேடிஎம் கனெக்ட் ஆப் மூலம் ஹெட்செட் பேரிங் உள்ளிட்டவை இதில் அடங்கும். ரைடர்கள் ஸ்ட்ரீட் மற்றும் ட்ராக் ஆகிய 2 டிஸ்ப்ளே மோட்ஸ்களை பெறுகிறார்கள். கூடுதலாக இந்த பைக் ரெஃப்ரஷ்ட் சுவிட்ச் கியருடன் வருகிறது. இதில் TFT டிஸ்ப்ளேவைக் கட்டுப்படுத்த 4-வே மெனு சுவிட்ச் உள்ளது. KTM Duke 250 மோட்டர் சைக்கிளின் எஞ்சின் மற்றும் ஹார்ட்வேர் இயந்திர ரீதியாக 250 டியூக் மாறாமல் உள்ளது. இது 31hp பவர் மற்றும் 25Nm பீக் டார்க்கை வழங்கும் 248சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் தொடர்ந்து இயங்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பை-டைரக்ஷ்னல் குயிக்ஷிஃப்டர் மற்றும் ஸ்விட்ச்சபிள் டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் இந்த போக USD ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ், ரியர் மோனோஷாக் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்ஸ்களை கொண்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டமை பொறுத்தவரை 320மிமீ ஃப்ரன்ட் டிஸ்க் மற்றும் 240மிமீ ரியர் டிஸ்க் உள்ளிட்டவை அடங்கும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.