AUTOMOBILE

பிரீஸ்ஸா, நெக்சானுக்கு போட்டியாக கைலாக்கை அறிமுகப்படுத்திய ஸ்கோடா... விலை, டெலிவரி தேதி அறிவிப்பு!

மாருதி சுசூகி பிரீஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 போன்ற கார்களுக்கு போட்டியாக ஸ்கோடா கைலாக் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா, கைலாக்கிற்கான முன்பதிவுகள் டிசம்பர் 2ம் தேதி முதல் ஆரம்பமாகி உள்ளன. கைலாக்கின் அனைத்து வேரியண்ட்டுக்கான விலைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்கோடாவின் முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவியின் அடிப்படை விலை ரூ.7.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கைலாக்கிற்கான டெலிவரிகள் ஜனவரி 27, 2025 முதல் தொடங்கும். முதல் 33,333 வாடிக்கையாளர்கள் 3 வருட நிலையான பராமரிப்பு வசதியை இலவசமாகப் பெறுவார்கள் என்றும் ஸ்கோடா தெரிவித்துள்ளது. ஸ்கோடா கைலாக் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நான்கு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. அவற்றின் (எக்ஸ்-ஷோரூம்) விலைகள் கிளாசிக் 1.0 TSI MT - ரூ. 7,89,000 கிளாசிக் 1.0 TSI AT - AT இல்லை சிக்னேச்சர் 1.0 TSI MT - ரூ. 9,59,000 சிக்னேச்சர் 1.0 TSI AT - ரூ. 10,59,000 சிக்னேச்சர்+ 1.0 TSI MT - ரூ. 11,40,000 சிக்னேச்சர்+ 1.0 TSI AT - ரூ. 12,40,000 பிரெஸ்டீஜ் 1.0 TSI MT - ரூ. 13,35,000 பிரெஸ்டீஜ் 1.0 TSI AT - ரூ. 14,40,000 ஸ்கோடா தனது முதல் சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவியான கைலாக்கை நவம்பர் 6ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், ஸ்கோடா மிகவும் கச்சிதமான எஸ்யூவி பிரிவில் நுழைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மாருதி சுசூகி பிரீஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 போன்ற கார்களுக்கு போட்டியாக ஸ்கோடா கைலாக் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. நவம்பர் 15 அன்று கைலாக் கிளப் என்று பெயரிடப்பட்ட, காம்பாக்ட் எஸ்யூவிக்கான உறுப்பினர் திட்டத்தை ஸ்கோடா அறிமுகப்படுத்தியது. முன்பதிவு செய்வது முதல் ஸ்கோடா கைலாக் வாங்குவது வரை, சாத்தியமான வாடிக்கையாளர்களை ஈடுபடுத்துவதற்கும், அவர்களின் பயணம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான பதிவுகள் நவம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது. இதையும் படிக்க: மஹிந்திரா எஸ்யூவியை விலை ரூ.50,000 அதிகரிப்பு… என்ன காரணம் தெரியுமா? 115bhp மற்றும் 178Nm டார்க் செயல்திறன் கொண்ட, 1.0 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. கைலாக், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி கைலாக் அதிகபட்சமாக மணிக்கு 188 கிமீ வேகத்தை எட்டும் என்றும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் 10.5 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்றும் ஸ்கோடா தெரிவித்துள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, குஷாக்கை விட கைலாக் 230 மிமீ குறைவான உயரம் கொண்டது. கைலாக் 3,995 மிமீ நீளம், 1,783 மிமீ அகலம் மற்றும் 1,619 மிமீ உயரம், 2,566 மிமீ வீல்பேஸ், இது குஷாக்கை விட 85 மிமீ சிறியது மற்றும் 189 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எனினும், கைலாக்கின் உட்புறம் குஷாக்கை ஒத்திருக்கிறது. ஒரே மாதிரியான ஏர் வென்ட்ஸ், டச் கட்டுப்பாடுகள், 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கக் கூடிய 10.1-இன்ச் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட ஒத்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த காம்பாக்ட் எஸ்யூவியானது ஓட்டுநர் மற்றும் முன்பக்கம் உட்காருபவருக்கு காற்றோட்டமான இருக்கைகளுடன் வருகிறது. இது இந்த பிரிவின் முதல் புதிய அம்சமாகும். இதையும் படிக்க: ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயரவுள்ள BMW பைக்குகளின் விலை… என்ன காரணம் தெரியுமா? கைலாக் ஒரு சிங்கிள்-பேன் சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் இன்டெக்ரேஷன், அத்துடன் குளிரூட்டப்பட்ட பெட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் குறிப்பிட்ட வேரியண்ட்கள் க்ரூஸ் கன்ட்ரோலைப் பெறுகின்றன. மேலும் ஆறு-வேக ஆட்டோமேட்டிக் அம்சம் கொண்ட ஸ்டீயரிங்-மவுண்டட் பேடில் ஷிஃப்டர்களைப் பெறுகின்றன. சிங்கிள் அல்லது டூயல் டோன் இன்டீரியர் டிசைனுடன் லெதரெட் இருக்கைகள் கிடைக்கின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, கைலாக் 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தரமாக வருகிறது. இதில் ஆறு ஏர்பேக்குகள், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிரிபியூஷன் (EBD), பிரேக் டிஸ்க் வைப்பிங், ரோல்ஓவர் புரொடெக்‌ஷன், மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், எலெக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக், பயணிகள் ஏர்பேக் டிஆக்டிவேஷன், மல்டி கொலிஷன் பிரேக்கிங், ISOFIX குழந்தை இருக்கை ஏற்றங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கைலாக், ஸ்கோடாவின் நவீன தனித்துவமான வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் ஸ்கோடாவின் எல்ரோக்கில் காண முடிந்தது. இது ஸ்கோடாவின் பாரம்பரிய ரேடியேட்டர் கிரில்லில் இருக்கும் 3D ரிப்சுடன் கூடிய பளபளப்பான கருப்பு கிரில்லுடன் வந்துள்ளது. முன்புற வடிவமைப்பில் அலுமினிய ஆக்சன்ட்சுடன் கூடிய கீழ்ப்புற ஸ்பாய்லர் மற்றும் எல்இடி டிஆர்எல்களை கருப்பு கிரில் உடன் தடையின்றி ஒருங்கிணைக்கும் புதிய அம்சம் ஆகியவை அடங்கும். அதே சமயம் ஹெட்லைட்கள் முன்புறத்தில் கீழ்புறமாக இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளன. அதன் பிரிவில் முன்னணியில், கைலாக் 446 லிட்டர் பூட் திறனை வழங்குகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.