AUTOMOBILE

ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலை... சக்திவாய்ந்த டர்போசார்ஜ் செய்யப்பட்ட டாப் 5 பெட்ரோல் கார்கள் இதோ!

இந்திய கார் சந்தையில், மலிவு விலையுடன் செயல்திறனையும் வழங்கும் கார்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினம். ஆனால் கவலைப்பட வேண்டாம், டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின்களுடன் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான பல அற்புதமான விருப்பங்கள் உங்களுக்கு சக்திவாய்ந்த ஓட்டுநர் அனுபவத்தை அளிக்கிறது. ரூ.15 லட்சத்தில் உள்ள டாப் 5 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் கார்கள் பற்றி விரிவாக பார்ப்போம். 1. ஹூண்டாய் வெர்னா: 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் கொண்ட ஹூண்டாய் வெர்னா ஆனது ரூ.15 லட்சத்தில் வாங்கக்கூடிய சக்திவாய்ந்த கார் ஆகும். இது இந்தியாவின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.14.93 லட்சத்தில் தொடங்குகிறது. டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய வெர்னா காரானது, 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட, 158 bhp பவரையும் மற்றும் 253 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது லிட்டருக்கு 20 கிமீ எரிபொருள் செயல்திறனை அளிக்கும் என்று ஹூண்டாய் கூறுகிறது. 2. மஹிந்திரா XUV 3XO: இந்த செக்மென்ட்டில் இது மிகவும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் கார் ஆகும். இதில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன, AX5 டிரிம்களில் இருந்து அதிக சக்திவாய்ந்த 1.2-லிட்டர் எஞ்சின் கிடைக்கிறது. இது 129 bhp பவரையும், 230 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த கார் ஏற்கனவே சந்தையில் பெரும் தேவையுடன் வேகத்தை அதிகரித்து வருகிறது. 3. ஹூண்டாய் வென்யூ N லைன் மற்றும் i20 N லைன்: ஹூண்டாய் வென்யூ N லைன் மற்றும் i20 N லைன் காரானது 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 118 bhp பவரையும், 172 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ N லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.12.08 லட்சத்தில் தொடங்கி ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. மற்றும் ஹூண்டாய் வென்யூ i20 N லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.10 லட்சத்தில் தொடங்கி ரூ.12.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 4. டாடா நெக்ஸான்: டாடா நெக்ஸான் காரானது டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118 bhp பவரையும், 172 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. டாடா நெக்ஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.8 லட்சத்தில் தொடங்கி ரூ.14.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. 5. டாடா அல்ட்ரோஸ் ரேசர்: டாடா அல்ட்ரோஸ் ரேசர் ஆனது அல்ட்ரோஸ் ​​சீரிஸ்-இல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கூடுதல் வேர்ஷன் ஆகும். இது நெக்ஸானின் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டைப் பயன்படுத்துகிறது மற்றும் 118 bhp பவரையும் மற்றும் 172 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்தது. அல்ட்ரோஸ்​​ ரேசரின் விலையானது ரூ.9.49 லட்சத்தில் தொடங்கி ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. அல்ட்ரோஸ் ​​வழங்கும் இந்த ஸ்போர்ட்டி கார் தற்போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.