லெக்ட்ரிக்ஸ் (Lectrix) நிறுவனமானது என்டியூரோ என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை, முன்பதிவுத் தகவல்களுடன் அனைத்து சிறப்பம்சங்களையும் தற்போது தெரிந்துகொள்ளலாம். லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்டியூரோ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் பேட்டரி சேவை (BaaS), ரூ. 57,999 (எக்ஸ்-ஷோரூம்) விலை மற்றும் பிரிவில் சிறந்த 42-லிட்டர் பூட் மற்றும் மொபைல் இணைப்புடன் கூடிய எங்களின் ஒரு சுவாரஸ்யமான தயாரிப்பாகும். லெக்ட்ரிக்ஸ் என்டியூரோ செயல்திறன் என்டியூரோவைப் பொறுத்தவரையில், பேட்டரி திறனைக் குறிக்கும் வகையில் இது என்டியூரோ 2.0 மற்றும் என்டியூரோ 3.0 என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. என்டியூரோ 2.0 ஆனது 2.3 kWh பேட்டரி பேக்அப்பைக் கொண்டுள்ளது, என்டியூரோ 3.0 இல் 3kWh பேட்டரி பேக்அப் உடன் வருகிறது. முந்தையது சுற்றுச்சூழல் பயன்பாடு, அதாவது எக்கோ மோடில் 90 கிமீ இந்தியன் டிரைவ் சைக்கிள் (ஐடிசி) வரம்பைக் கொண்டுள்ளது, பிந்தையது 117 கிமீ வரை நீடிக்கும். இரண்டு பேட்டரிகளும் 2.4kW மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன, இது என்டியூரோ 2.0 ஐ 5.1 வினாடிகளில் 0-40 வரையிலான வேகத்திற்கு துரிதப்படுத்த முடியும், அதே நேரத்தில் என்டியூரோ 3.0 இல் 5.5 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிமீ ஆகும். லெக்ட்ரிக்ஸ் என்டியூரோவின் விலை என்டியூரோ 2.0ஐ இரண்டு வழிகளில் வாங்கலாம், வழக்கமான முறையில் நீங்கள் ஸ்கூட்டரை பேட்டரியுடன் வாங்கலாம் அல்லது நீங்கள் பேட்டரியை குத்தகைக்கு எடுக்கும் பேட்டரி சேவை (BaaS) மூலம் வாங்கலாம். ஆரம்பகால திட்டத்தின் கீழ், முதலில் வாங்கும் 1000 நபர்களுக்கு ரூ.57,999 (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கும், அதன் பிறகு ரூ.59,999 (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கும் கிடைக்கும். ஸ்கூட்டரை வாங்கியவுடன், ரூ.999 முதல் மாத சந்தா கட்டணம் இருக்கும். நீங்கள் பேட்டரியுடன் இந்த ஸ்கூட்டரை தேர்வுசெய்தால், அதே ஆரம்பகால திட்டத்தின் கீழ் ரூ.84,999 (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கும் மற்றும் அதன் பிறகு ரூ.89,999 விலைக்கும் கிடைக்கும். மறுபுறம், என்டியூரோ 3.0 ஆனது பேட்டரி சேவை (BaaS) விருப்பத்தைப் பெறவில்லை மற்றும் ஆரம்பத்தில் இந்த ஸ்கூட்டருக்கு ரூ.94,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, பின்னர், அதன் விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு கிடைக்கும். லெக்ட்ரிக்ஸ் என்டியூரோவின் பேட்டரி சேவை திட்டம் பேட்டரி சேவை மாடலை வழங்கும் அரிய மின்சார ஸ்கூட்டர்களில் என்டியூரோவும் அடங்கும். அதிலும், லெக்ட்ரிக்ஸுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன, பேட்டரி லீசிங் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் + லீசிங். பேட்டரி குத்தகையானது ஸ்கூட்டரின் விலையை சுமார் 40% குறைக்க வழிவகுக்கும் மற்றும் பயனர் மாதாந்திர கட்டணம் செலுத்தி பேட்டரியை குத்தகைக்கு வாங்குவர். மறுபுறம், பேட்டரி ஸ்வாப்பிங் + லீசிங், நீங்கள் வரம்பில் குறைவாக இயங்கும் போதெல்லாம் ஸ்வாப் ஸ்டேஷன்களில் பேட்டரிகளை மாற்றும் விருப்பத்தை சேர்க்கிறது. ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது ஸ்கூட்டரின் இயக்கமில்லா நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. லெக்ட்ரிக்ஸ் என்டியூரோவின் அம்சங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்டின் படி, என்டியூரோ பல அம்சங்களைப் பெறுகிறது. என்டியூரோ 2.0 ஆனது 5-இன்ச் கலர் பிரிவு எல்சிடி யூனிட்டைப் பெறுகிறது, அதே சமயம் என்டியூரோ 3.0 5 இன்ச் டிஎஃப்டி திரையைப் பெறுகிறது. ஸ்கூட்டரை மொபைல் செயலியுடன் இணைக்க முடியும், இது பேட்டரி புள்ளிவிவரங்கள், உங்களது பயணம் குறித்த ஆய்வு மற்றும் உங்கள் ஸ்கூட்டரை ஓட்டத் திட்டமிடாதபோது, சிற குறிப்பிட்ட அம்சங்களுடன் உங்களுக்கு உதவுகிறது. மேலும், இது ரிவர்ஸ் மோட், சைட் ஸ்டாண்ட் கட்-ஆஃப் மற்றும் ஹில்-ஹோல்ட் போன்ற சில கூடுதல் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இரண்டு பேட்டரிகளுக்கும் 3 ஆண்டுகள் அல்லது 36,000 கிமீ உத்தரவாதத்தைப் பெறுகிறது. லெக்ட்ரிக்ஸ் என்டியூரோவின் முன்பதிவு என்டியூரோவின் முன்பதிவுகள் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கும், அதே நேரத்தில் அதன் டெலிவரிகள் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. None
Popular Tags:
Share This Post:
2025 ஜனவரி 1 முதல் உயர உள்ள ஜீப், சிட்ரோயன் கார்களின் விலை...!
- by Sarkai Info
- December 20, 2024


Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்வை அறிவித்துள்ள ஏத்தர் நிறுவனம் - ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்....
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 16, 2024
-
- December 15, 2024
-
- December 14, 2024
Featured News
Latest From This Week
இந்தியாவில் அறிமுகமாகும் எம்ஜி சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர்.... விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன...?
AUTOMOBILE
- by Sarkai Info
- December 6, 2024
Scooters: ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்களின் பட்டியல் இதோ!
AUTOMOBILE
- by Sarkai Info
- December 6, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.