AUTOMOBILE

இந்தியாவில் அறிமுகமான புதிய ஹோண்டா அமேஸ்; இவ்வளவு சிறப்பு அம்சங்களா?

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் புதிய ஹோண்டா அமேஸ் செடானை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் செடானின் மூன்றாம் தலைமுறையான அமேஸ் காரில், தனித்துவமான எக்ஸ்டீரியர் டிசைன், புதிய இன்டீரியர் டிசைன், கூடுதல் அம்சங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த அமேஸ் மாடலானது V, VX மற்றும் ZX ஆகிய மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது. இந்தப் புதிய அமேஸ் மாடலானது ரூ.7.99 லட்சம் முதல் ரூ.10.89 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்கிறது. இந்த விலைகள் குறுகிய நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ஹோண்டா அமேஸ் ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி டிசையர் உட்பட டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. சரி, இப்போது இந்தியாவின் முதல் 10 நகரங்களில் புதிய ஹோண்டா அமேஸின் ஆன்ரோடு விலைகளைப் பற்றி பார்ப்போம். பெங்களூருவில் ஹோண்டா அமேஸின் டாப்-ஆஃப்-லைன் வேரியண்டின் ஆன்-ரோடு விலை ரூ.13.4 லட்சம் ஆகும். அதனைத் தொடர்ந்து டெல்லியில் ரூ.12.6 லட்சம் விலையிலும், மும்பையில் ரூ.13 லட்சம் விலையிலும், சென்னையில் ரூ.13.5 லட்சம் விலையிலும், ஹைதராபாத்தில் ரூ.13.4 லட்சம் விலையிலும், கொல்கத்தாவில் ரூ.12.2 லட்சம் விலையிலும், லக்னோவில் ரூ.12.65 லட்சம் விலையிலும், ஜெய்ப்பூரில் ரூ.12.7 லட்சம் விலையிலும், அகமதாபாத்தில் ரூ.12.2 லட்சம் விலையிலும் மற்றும் இந்தூரில் ரூ.12.65 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் 2024-ல் பல சிறந்த அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. எல்இடி ஹெட்லைட்கள், 15 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், ‘Z’ ஷேப்டு LED டெயில்லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் குரோம் ஸ்ட்ரிப் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது தவிர, டிஜிட்டல் கிளஸ்டருடன் 10.25-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்கள், 460 லிட்டர் பூட் ஸ்பேஸ், வயர்லெஸ் சார்ஜர், ஏசி கட்டுப்பாடுகளுடன் ரிமோட் ஸ்டார்ட், ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, 6 ஏர்பேக்குகள், ABS, EBD மற்றும் சென்சார் அடிப்படையிலான ADAS சிஸ்டம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்தக் காரில் 90hp பவர் மற்றும் 110Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மைலேஜ் பொறுத்தவரையில், CVT ஆப்ஷனுக்கு 19.46kmpl மற்றும் MT ஆப்ஷனுக்கு 18.65kmpl கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை உத்தரவாதத்துடன் அமேஸ் 2024-ஐ ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மூன்று ஆண்டுகளுக்கு நிலையான உத்தரவாதம் வழங்கப்படும், மேலும் இதை ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.