AUTOMOBILE

Hyundai Car: BNCAP டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கும் ஹூண்டாய் கார் எது தெரியுமா?

பாரத் நியூ கார் அசஸ்மென்ட் ப்ரோகிராமின் (BNCAP) கீழ், ஹூண்டாய் காருக்கான பாதுகாப்பு மதிப்பீடு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த கிராஷ் டெஸ்ட்டிற்கு அனுப்பப்பட்ட கார்களின் பெயர்களை ஹூண்டாய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் க்ரெட்டா, வென்யூ மற்றும் எக்ஸ்டெர் போன்ற மாடல்களாக இருக்கும் அல்லது கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 போன்ற மாடல்களாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நிறுவனத்தின் ​​ஃபிளாக்ஷிப் மற்றும் இன்டர்னல் கம்பஸ்ஷன் இன்ஜின் எஸ்யூவி-ஆக இருக்கும் டக்ஸனுக்கான (Tucson) BNCAP டெஸ்ட் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் Tucson மாடலானது AOP-ல் அதாவது அடல்ட் ஆக்குபன்ட் ப்ரொட்டக்ஷனில் மொத்தம் 32 பாயின்ட்ஸ்களுக்கு 30.84 பாயின்ட்ஸ்களும், COP-ல் சைல்ட் ஆக்குபன்ட் ப்ரொட்டக்ஷனில் மொத்தமுள்ள 49 பாயின்ட்ஸ்களுக்கு 41 பாயின்ட்ஸ்களையும் பெற்று மேற்கண்ட 2 செக்மென்ட்ஸ்களிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட்ஸ் உட்பட இந்த SUV-யின் அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் இந்த 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங் பொருந்தும். இந்த எஸ்யூவி-யில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையான பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்ஸ், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், டவுன்ஹில் பிரேக் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ்,ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் மற்றும் லோட் லிமிட்டர்ஸ், அட்வான்ஸ்ட் பெல்ஸ் மற்றும் விசில்ஸ் ஆகியவை அடங்கும். ஹூண்டாய் டக்சன் மொத்தம் இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 156PS பவர் மற்றும் 192Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 186PS பவர் மற்றும் 416Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை அடக்கம். ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் பெட்ரோலுக்கு 6-ஸ்பீட் AT மற்றும் டீசலுக்கு 8-ஸ்பீட் AT விற்கப்படுகிறது. டீசலில் ஆல்-வீல் டிரைவ் (AWD) விருப்பமும் உள்ளது. Hyundai Tucson மாடலின் விலைகள் ரூ.29.02 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.35.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் டக்ஸன்-ஐ தவிர டாடா பஞ்ச்.ஈவி, டாடா நெக்ஸான், டாடா நெக்ஸான்.ஈவி, டாடா கர்வ், டாடா கர்வ்.ஈவி, டாடா ஹாரியர், டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி 3 எக்ஸ்ஓ, மஹிந்திரா எக்ஸ்யூவி400 மற்றும் மஹிந்திரா தார் ரோக்ஸ் போன்ற எஸ்யூவி-க்கள் BNCAP கிராஷ் டெஸ்ட்களில் 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா மற்றும் டாடா எஸ்யூவி-களுடன் இணைந்து பாரத் என்சிஏபி (பிஎன்சிஏபி) மூலம் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் டக்சன் ஆகும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.