AUTOMOBILE

உங்க காருக்கு இன்சூரன்ஸ் பண்ணப்போறீங்களா..? அப்ப இந்த விஷயத்தை ஞாபகம் வச்சிக்கோங்க!

உங்களுடைய வாகனம் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு கார் இன்சூரன்ஸ் வாங்குவது என்னமோ நல்ல விஷயம் தான். ஆனால் உங்களுக்கு ஏற்ற சரியான ஒரு பாலிசியை தேர்வு செய்வது இன்னும் முக்கியமானதாக அமைகிறது. தற்போது பல்வேறு விதமான ஆப்ஷன்கள் கிடைக்கும்போது பிரீமியம் தொகையில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அதையும் தாண்டி அம்சங்கள், கவரேஜ் மற்றும் வேறு சில நிபந்தனைகளையும் நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு கார் இன்சூரன்ஸ் வாங்கும்போது நீங்கள் எந்தெந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கவரேஜ் வகைகள் : முதலில் நீங்கள் தேர்டு பார்ட்டி லையாபிலிட்டி இன்சூரன்ஸ் மற்றும் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். தேர்டு பார்ட்டி லையாபிலிட்டி என்பது விதிகளின்படி நீங்கள் கட்டாயமாக வாங்க வேண்டிய ஒரு இன்சூரன்ஸ் திட்டம். இது உங்களால் மூன்றாவது நபரின் வாகனத்திற்கோ அல்லது அவருக்கோ ஏற்படும் சேதத்திற்கான கவரேஜை வழங்குகிறது. இது உங்களையோ உங்களுடைய வாகனத்தையோ பாதுகாக்காது. மறுபுறம் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லையாபிலிட்டி மற்றும்சாலை விபத்து, திருட்டு, தீ விபத்து அல்லது இயற்கை சீற்றங்கள் காரணமாக உங்களுடைய வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதற்கு உதவும். ஆட்-ஆன் கவர்கள் உங்களுடைய பாலிசியை இன்னும் மெருகேற்றுவதற்கு நீங்கள் ஒரு சில ஆட்-ஆன் கவர்களை தேர்வு செய்யலாம். இதில் ஜீரோ டிப்ரிசியேஷன், என்ஜின் புரொடெக்ஷன், ரோடுசைடு அசிஸ்டன்ஸ், ரிட்டன் டு இன்வாய்ஸ் போன்ற ஆட் ஆன்கள் அடங்கும். விதிவிலக்குகள்: உங்களுடைய பாலிசியில் எந்தெந்த விஷயங்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக தேய்மானம் அல்லது மெக்கானிக்கல் பிரேக் டவுன் காரணமாக ஏற்படும் சேதங்கள், மது அல்லது பிற போதைப் பொருட்கள் பயன்படுத்தியதன் விளைவாக வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணித்தல், விபத்திற்கு பிறகு ஏற்படும் சேதங்கள் போன்றவை பெரும்பாலான பாலிசிகளில் விலக்குகளாக அறிவிக்கப்பட்டு இருக்கும். கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ (CSR): பெறப்பட்ட மொத்த கிளைம்களில் அங்கீகரிக்கப்பட்ட கிளைம்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ என்பதாகும். பொதுவாக 90% அல்லது அதற்கும் அதிகமான CSR வைத்திருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது. டிடெக்டபில்ஸ்: டிடெக்டபில்ஸ் என்பது கிளைம் தொகையின் ஒரு பகுதியை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்துவதற்கு முன்பு நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். ஏதேனும் விபத்து ஏற்படும் பட்சத்தில் டிடெக்டபில் தொகையை உங்களால் கொடுக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நெட்வொர்க் கேரேஜுகள் உங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பரந்த நெட்வொர்க் கொண்டகேரேஜுகள் கார் ரிப்பேர் செய்வதற்கு கிடைக்கிறதா என்பதை நீங்கள் சரி பார்க்க வேண்டும். உங்களுடைய லொகேஷனில் நல்ல ஒரு நெட்வொர்க் கேரேஜ் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்வது சிறந்தது. நோ கிளைம் போனஸ் (NCB): நோ கிளைம் போனஸ் என்பது நீங்கள் கடக்கக்கூடிய கிளைம் இல்லாத ஒவ்வொரு வருடத்திற்கும் பிரீமியம் தொகைக்கு வழங்கப்படும் டிஸ்கவுண்ட். இது உங்களுடைய பிரீமியம் தொகையை 50% வரை குறைக்க வாய்ப்புள்ளது. பிரீமியம் மற்றும் காப்பீட்டு தொகை: குறைவான பிரீமியம் என்பதற்காக மட்டுமே ஒரு பாலிசியை தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் மலிவான பாலிசியில் உங்களுக்கு போதுமான காப்பீடு கிடைக்காமல் போகலாம். எனவே உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற போதுமான காப்பீடுகள் இருக்கும் ஒரு பாலிசியை வாங்குவது நல்லது. பாலிசி விதிகள் மற்றும் நிபந்தனைகள்: பாலிசி டாக்குமெண்ட்டை ஒரு வரி விடாமல் முழுவதுமாக படித்து புரிந்து கொள்வது அவசியம். கிளைம் எவ்வாறு ப்ராசஸ் செய்யப்படும், எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும், வேறு ஏதேனும் குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளனவா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர் சேவை மற்றும் கருத்துக்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நல்ல வாடிக்கையாளர் சேவை உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். மேலும் இதற்கு முன்பு மக்கள் கொடுத்துள்ள கருத்துக்கள் மற்றும் ஃபீட்பேக்குகளை ஒருமுறை படித்து பாருங்கள். ஆகவே ஒரு கார் இன்சூரன்ஸ் வாங்கும் பொழுது பிரீமியம் தொகையையும் தாண்டி கவரேஜ், ஆட்-ஆன்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை போன்ற விஷயங்களை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய தேவைகளை புரிந்து கொண்டு, பல்வேறு பாலிசிகளை ஒப்பிட்டு பார்த்து, விலக்குகள் மற்றும் செயல்முறை போன்றவற்றில் கவனம் செலுத்தி உங்கள் வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சரியான ஒரு பாலிசியை தேர்வு செய்யுங்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.