AUTOMOBILE

இந்தியாவின் முதல் டால்பி அட்மோஸ் எஸ்யூவி.. மகேந்திரா நிறுவனம் அறிமுகம்!

டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் எஸ்யூவி காரை மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆட்டோமொபைல் சந்தையை பொறுத்த வரையில், டாடா, மாருதி, ஹூண்டாய், ஹோண்டா, மகேந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மக்களை கவரும் வகையில், புதுமையான அம்சங்களுடன் புதுப்புது தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்யும் மகேந்திரா நிறுவனம், தனது எலெக்ட்ரிக் கார்களில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பத்தை இணைத்திருக்கிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, தனது எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களான பிஇ 6(BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகியவற்றில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை அறிவித்தது. இது, இந்தியாவைச் சேர்ந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் டால்பி அட்மோஸை தனது கார்களில் கொண்டு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் வாடிக்கையாளர்களும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை பெற முடியும், பாடல்களுக்கான பிரத்யேக இணையதமான கானா, இந்த இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மேம்பட்ட ஒலி அனுபவித்தை வழங்குகிறது. பிஇ 6(BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆனது 16 ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்களுடன் கூடிய பிரீமியம் ஆடியோ அமைப்பைக் கொண்டுள்ளது. முன் இருக்கைகள் ட்வீட்டர், மிட்-ரேஞ்ச் டிரைவர் மற்றும் வூஃபர் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று வழி ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரம், காரின் மையப் பகுதியில் ஹர்மனின் காப்புரிமை பெற்ற யூனிட்டி ஸ்பீக்கர் வடிவமைப்பை உள்ளடக்கியுள்ளது. சப்ஊஃபர் மற்றும் மேற்கூரையின் மீது பொருத்தப்பட்டுள்ள இரண்டு ஸ்பீக்கர் டிரைவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள, பின்புற சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மிதமான ஒலியை வழங்குகின்றன. பிஇ 6(BE 6), பேக் ஒன் அடிப்படை வகையின் அறிமுக விலை ரூ. 18.90 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் எக்ஸ்இவி 9இ (XEV 9e) இன் பேக் ஒன் விலை ரூ. 21.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையில் கிடைக்கிறது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களிலும் பேக் ஒன் மிகவும் அடிப்படையான அம்சத்தை வழங்குகிறது. இதன் முழுமையான விலை பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மகேந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இங்ளோவின் (INGLO) அடிப்படையில், இந்த இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் முன்பதிவும் ஜனவரி 2025 இன் பிற்பகுதியில் தொடங்கும் மற்றும் இதன் டெலிவரி 2025 பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. பிஇ 6(BE 6) எலெகட்ரிக் கார், 4,371 மிமீ நீளம் கொண்டது, ஒட்டுமொத்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 207 மிமீ மற்றும் பேட்டரி கிரவுண்ட் கிளியரன்ஸ் 218 மிமீ ஆகும். அதேநேரத்தில், எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெகட்ரிக் காரானது, 4,789 மிமீ நீளம் கொண்டது, ஒட்டுமொத்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 207 மிமீ மற்றும் பேட்டரி கிரவுண்ட் கிளியரன்ஸ் 222 மிமீ ஆகும். வடிவமைப்மைப் பொறுத்த வரையில், பெரிய எஸ்யூவியான - எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆனது 150 லிட்டர் முன்பக்க ஸ்டோரேஜ் உடனும், 663-லிட்டர் பின்பக்க ஸ்டோரேஜ் வசதியுடனும் வருகிறது. ஒப்பிடுகையில், பிஇ 6(BE 6) ஆனது 455-லிட்டர் பின்பக்க ஸ்ட்டோரேஜ் மற்றும் 45-லிட்டர் முன்பக்க ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மஹிந்திரா பிஇ 6(BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகிய 2 எஸ்யூவி கார்களுமே 59 கிலோவாட் மற்றும் 79 கிலோவாட் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. இந்த LFP (லித்தியம் இரும்பு பாஸ்பேட்) பேட்டரி பேக்குகள் மஹிந்திராவால் தாக்கல் செய்யப்பட்ட 35 காப்புரிமை விண்ணப்பங்களால் ஆதரிக்கப்படுகின்றன. 79 கிலோவாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டபிஇ 6(BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e), முறையே 682 கிலோமீட்டர் மற்றும் 656 கிலோமீட்டர் என்ற ARAI-சான்றளிக்கப்பட்ட வரம்பில் (MIDC கட்டம் 1 + 2) உள்ளது. நகர சூழ்நிலைகளில், ஏசி இயக்கப்பட்டால், 79 கிலோவாட் பேட்டரி பேக் 500 கிமீ ரேஞ்சை வழங்கும் என்று மஹிந்திரா கூறுகிறது. 175 கிலோவாட் டிசி (DC) ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரியை 20 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.