AUTOMOBILE

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் எலக்ட்ரிக் வாகனம்.. எலக்ட்ரிக் வாகன போட்டியில் புதிதாக இணையும் சிமெண்ட் நிறுவனம்!

உலகம் முழுக்க மின்சார வாகனங்களுக்கான விற்பனை அதிகரித்து வருவதால், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளன. அதற்கேற்றார் போல், பல முன்னணி பிராண்டுகளுக்கிடையே தொழில் போட்டியும் நிலவி வருகிறது. அதில் ஒரு புதிய போட்டியாளராக ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் இணையவுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமானது எஃகு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட், ஸ்டீல், வாகனம் மற்றும் வண்ணப்பூச்சுகள் உட்பட பல துறைகளில் தங்களது பங்கை அளித்து வருகிறது. அந்த வகையில், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் அடுத்ததாக சொந்த தயாரிப்பில் மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்காக சீனாவின் எஸ்ஏஐசி (SAIC) மோட்டாருடன் 1.5 பில்லியன் டாலருடன், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் அதன் சொந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கான பிராண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் இந்தியாவில் அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை தொடங்க தயாராக இருக்கிறார். இதற்காக, அவுரங்காபாத்தில் மின்சார வாகன தயாரிப்புக்காக ஒரு புதிய ஆலை உருவாக்கப்பட உள்ளது, மேலும் இதன்மூலம் 5,200 பேருக்கு வேலைவாய்யுகள் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடந்து வரும் நிலையில், சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமம், இந்தியாவில் தனது சொந்த மின்சார வாகன (EV) பிராண்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஜிண்டால் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்தியாவில் அதன் தயாரிப்புகளை விற்கும் சீன நிறுவனத்தின் விரிவாக்கமாக இது இருக்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு. நாங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மதிப்பைச் சேர்க்க விரும்புகிறோம், மேலும் இந்தியாவில் வாகனங்களை விற்க விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். நிறுவன அமைப்பின் ஒரு பகுதியாக, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கடந்த ஆண்டு எம்ஜி மோட்டார் இந்தியாவின் 35 சதவீத பங்குகளை, சீனாவின் எஸ்ஏஐசி (SAIC) மோட்டருடன் 1.5 பில்லியன் லாடர் ஒப்பந்தம் மூலம் வாங்கியது. கூடுதலாக, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு புதிய மின்சார வாகன உற்பத்தி ஆலையில் ரூ.27,200 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஜேஎஸ்டபிள்யூ குழு திட்டமிட்டுள்ளது. இந்த வசதி அவர்களின் வரவிருக்கும் மின்சார வாகன உற்பத்தியின் முயற்சியில் கவனம் செலுத்தும் என்று ஜிண்டால் உறுதிப்படுத்தியுள்ளார். அதன் சொந்த மின்சார வாகன பிராண்டுடன், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் போன்ற சந்தையில் முத்திரை பதித்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகமாவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், பைப்லைனில் உள்ள அதன் மின்சார வாகனங்களின் மாடல்கள் குறித்த எந்த விவரத்தையும் ஜிண்டால் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.