AUTOMOBILE

2024 நவம்பரில் உள்நாட்டில் 47,063 யூனிட்ஸ் விற்பனையை பதிவு செய்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம்...

இந்தியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்த 46,068 யூனிட்ஸ்களுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு அதாவது 2024 நவம்பரில் கூடுதலாக 995 யூனிட்ஸ் கார்களை விற்றுள்ளது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 47,063 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது. இது இந்திய சந்தையில் நிறுவனத்திற்கு year-on-year விற்பனையில் 2 சதவீதம் அதிகரிப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் EV தயாரிப்புகளின் விற்பனையில் சுமார் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிறுவனம் சுமார் 4,761 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்றதை ஒப்பிடும்போது, நடப்பாண்டு இதே மாதத்தில் அதாவது 2024 நவம்பரில் 5,202 எலெக்ட்ரிக் யூனிட்ஸ்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனிடையே முன்னதாக 2024-24 நிதியாண்டின் Q2 முடிவுகளை அறிவிக்கும்போது, ​​பயணிகள் மின்சார வாகன சந்தையில் 65 சதவீத சந்தை பங்கையும், தனிநபர் EV பிரிவில் 67 சதவீத பங்கையும் பெற்றுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஹாரியர் EV மற்றும் சியாரா EV உடன் EV தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் டாடா: இந்த ஆண்டு செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் Curvv EV-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்திய நிலையில், தற்போது இரண்டு புதிய தயாரிப்புகளான ஹாரியர் EV மற்றும் சியாரா EV உடன் பிரீமியம் EV சந்தையில் நுழைவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் டாடா ஹாரியர் EV மாடலானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9e-க்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல Harrier EV அறிமுகப்படுத்தப்பட்டதும், அந்த மாடல் 2025ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனையை துவக்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸின் 10 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இருக்கும். வரவிருக்கும் இந்த எலெக்ட்ரிக் வெர்ஷன் ICE-பவர்ட் டாடா ஹாரியரில் இருந்து பெரும்பாலான டிசைன் எலிமென்ட்ஸ்களை அப்படியே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதையும் படிக்க: பிரீஸ்ஸா, நெக்சானுக்கு போட்டியாக கைலாக்கை அறிமுகப்படுத்திய ஸ்கோடா… விலை, டெலிவரி தேதி அறிவிப்பு! எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால் ரேடியேட்டர் கிரில்லுக்குப் பதிலாக க்ளோஸ்ட் பேனல், புதிய அலாய் வீல்கள், மாற்றம் செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் பின்புறத்தில் exhaust muzzle இல்லாமல் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெறும் என தெரிகிறது. அதே நேரம் கேபினுக்குள் டாடா ஹாரியர் EV-ஆனது, இந்த மாடலின் ICE வெர்ஷனுடன் ஒப்பிடும்போது புதிய டிசைன் எலிமென்ட்ஸ்களுடன் வரும். வரவிருக்கும் இந்த எலெக்ட்ரிக் SUV-ஆனது ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேக்லிட் பேனல் மற்றும் பிராண்ட் லோகோவுடன் ஆட்டோமேக்கரின் லேட்டஸ்ட் ஸ்டீயரிங் வீலைக் கொண்டிருக்கும். இது தவிர 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர் போன்றவை சில குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும். Sierra EV மாடலானது 5-டோர் வெர்ஷனாக இந்தியாவில் 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும். முன்பு கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சியாரா EV-ஆனது முன்பை விட பெரிய கருப்பு பேனல்களுடன் இருந்தது. Tata Sierra EV-யின் கான்செப்ட் வெர்ஷன் வாகனத்தில் ஒரு chunky ஸ்கிட் பிளேட் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. அலாய் வீல்கள் ஏற்கனவே புதிய டாடா சஃபாரியில் கொடுக்கப்பட்டு விட்டதால், Sierra EV-ன் உற்பத்திப் பதிப்பில் வேறுபட்ட அலாய் வீல்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.