AUTOMOBILE

Scooters: ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்களின் பட்டியல் இதோ!

நீங்கள் ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் ஸ்கூட்டர் வாங்க விரும்பினால், கருத்தில் கொள்ள வேண்டிய பல விருப்பங்கள் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ற சில பிரபலமான ஸ்கூட்டர் மாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் 5 பிரபல ஸ்கூட்டர் மாடல்கள்… ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) பிரபல ஸ்கூட்டராக இருக்கும் ஹோண்டாவின் ஆக்டிவா பேஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,256-ஆக உள்ள நிலையில், டாப்-ஸ்பெக் வேரியன்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,429-ஆக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 6,250 ஆர்பிஎம்-ல் 8.1 பிஎச்பி பவர் மற்றும் 5,000 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 125 சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை மற்றும் சிறந்த செயல்திறனுக்காக புகழ்பெற்ற இந்த மாடலில் இருக்கும் அம்சங்களில் ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் ஃபைன்ட், ஸ்மார்ட் சேஃப் மற்றும் ஸ்மார்ட் ஸ்டார்ட் போன்றவை அடங்கும். இது எல்இடி ஹெட்லேம்ப், ACG உடன் சைலன்ட் ஸ்டார்ட், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சிறந்த செயல்திறனுக்கான எரிபொருள்-இன்ஜெக்ஷன் டெக்னலாஜியையும் கொண்டுள்ளது Also Read: KTM 250 Duke பைக் வாங்கப் போறீங்களா..? அப்ப உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்..! டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) நீங்கள் ஒரு ஸ்போர்ட்டி ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் TVS Ntorq வாங்குவது பொருத்தமாக இருக்கும். இதில் 125சிசி எஞ்சின் உள்ளது. இந்த யூனிட் 7,000 ஆர்பிஎம்-ல் 10 bhp பவர் மற்றும் 5,500 rpm ஆர்பிஎம்-ல் 10.9 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் Ntorq ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.86,982 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ.1.05 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இது ஸ்போர்ட்டி கிராபிக்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் நவீன கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. சுசுகி அக்சஸ் 125 (Suzuki Access 125) ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் Access 125 பிரபலமான மாடலாகும். இந்த மாடலின் என்ட்ரி-லெவல் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,700 மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.91,300 ஆகும். இந்த மாடலில் உள்ள 125சிசி எஞ்சின் 6,750 ஆர்பிஎம்-ல் 8.5 பிஎச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. LED லைட்டிங், ப்ளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எளிதான ஸ்டார்ட்-ஸ்டாப் சுவிட்ச் உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. Also Read: Hyundai Car: BNCAP டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கும் ஹூண்டாய் கார் எது தெரியுமா? டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TVS Jupiter ஒரு சிறந்த வடிவமைப்புடன் வருவது மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாகும். இந்த மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.74,691 முதல் தொடங்குகிறது மற்றும் 113 சிசி எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் யூனிட்டானது 6,500 ஆர்பிஎம்-ல் 8 பிஎச்பி பவரையும், ஐகோ அசிஸ்ட்டுடன் 5,000 ஆர்பிஎம்-ல் 9.8 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. iGo assist என்பது ஒரு ஹைப்ரிட் அம்சமாகும். இது வாகனத்திற்கு 10 சதவீதம் சிறந்த மைலேஜ் தருவதாகக் கூறுகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஆட்டோமேட்டிக் டர்ன் சிக்னல் ஸ்விட்ச்-ஆஃப், ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப் மற்றும் எமர்ஜென்சி பிரேக் வார்னிங் இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. ஹீரோ டெஸ்டினி 125 (Hero Destini 125) சமீபத்தில் வெளியான ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் 7,000 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் சக்திவாய்ந்த 125சிசி எஞ்சினுடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,048 மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.86,538 ஆகும். ப்ளூடூத் கனெக்டிவிட்டி, i3s டெக்னலாஜி மற்றும் சீட் பேக்ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.