TAMIL-NADU

கலைஞரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர்.. ரஜினி பேச்சை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின்

விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது.... ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ரஜினிகாந்த்தின் பேச்சை கேட்டு குலுங்கி சிரித்தனர். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, ஒரு வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களை பற்றி பிரச்சனை இல்லை; பழைய மாணவர்கள் தான் சிரமமானவர்கள். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல; ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். கலைஞர் ஒரு விஷயத்தை சொன்னால், அதற்கு அப்படியா! சந்தோஷம் என்று துரை முருகன் பதில் அளிப்பார். அவர் நன்றாக இருக்கிறது சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா? அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது. அவரைப்போல் பலர் இருக்கிறார்கள்;அத்தகைய சீனியர்களை சமாளிப்பது என்பது மிக கடினமான ஒன்று. அவர்கள் அனைவரையும் சமாளித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஹார்ட்ஸ் ஆஃப் யூ! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கலைஞர் குறித்து அரை மணி நேரம் புகழ்ந்து பேசியிருக்கிறார் என்றால் அவராக பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும். #JUSTIN "துரைமுருகன் என்ற ஒருவர் உள்ளார், அவர் கலைஞரின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவர்" அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்"புத்தகம் வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு #Karunanidhi #MKStalin #Rajinikanth | pic.twitter.com/NwOZIsfsod விமர்சனங்களை கலைஞர் எப்படி எடுத்துக்கொள்வார் என்றால் அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பார். தரம் குறைந்தவர் எழுதினால் அதனை கண்டுகொள்ள மாட்டார். அறிவார்ந்தவர்கள் எழுதினால் ஆராய்வார், விளக்கி கூறுவார். விமர்சனம் செய்யுங்கள் யாரையும் நோகடிக்காதீர்கள். இப்போது இருப்பவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பதே இல்லை. ஆனால் கலைஞர் பத்திரிகையாளர்களை பார்த்தாலே மகிழ்வார். கலைஞருக்கு பத்திரிகையாளர்களை சந்திப்பது யானைக்கு கரும்பு கிடைத்தது போன்றது. வீரப்பன், கன்னட நடிகத் ராஜ்குமார் கடத்திய நேரத்தில் கலைஞர் சோகமாக இருந்ததை பார்த்தேன். லஞ்சத்தை மையப்படுத்தி எடுத்த சிவாஜி படத்தை பார்த்து நல்லது செய்ய வேண்டும் என பெரு மூச்சு விட்டார். அந்த பெரு மூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்த படத்தின் வெற்றி விழாவிற்கு நான் வருவேன் என தைரியமாக கூறியவர் கலைஞர். என்று பேசினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி ஹிந்து குழுமத் தலைவர் என் ராம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். புத்தக வெளியீட்டிற்கு பிறகு கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் காட்சி வடிவத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக சார்பில் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் பங்கேற்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.