TAMIL-NADU

வாகன ஓட்டிகளே உஷார்.. தமிழ்நாட்டில் 3 முக்கியமான போக்குவரத்து விதி.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

தமிழ்நாட்டில் வாகனங்கள் தொடர்பான 3 முக்கிய போக்குவரத்து விதிகள் கவனம் பெற்றுள்ளன. இந்த போக்குவரத்து விதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விதிமுறை 1: பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அ தேபோல், வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறை 2: 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனம் இயக்க அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Also Read: பிஎம் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும்? விதிமுறை 3: நாடு முழுவதும் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்றை அரசு அனுப்பி உள்ளது. வாகனங்களில் நம்பர் பிளேட்கள் வைக்க சாதாரண ஸ்க்ரூ மற்றும் போல்டுகளுக்கு பதிலாக ரிவெர்ட் பொறுத்தப்படுவது கட்டாயம் ஆகிறது. இந்த பிளேட்களை நீக்க முடியாத அளவிற்கு ரிவெர்ட் பொறுத்த வேண்டும். கடந்த நவம்பர் மாதத்திலேயே இந்த விதி வந்துவிட்டது. ஆனாலும் இப்போதுதான் இதை நாடு முழுவதும் அமல்படுத்த தொடங்கி உள்ளனர். அதேபோல், உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) கொண்டு வருவதும் அவசியம் ஆகிறது. இந்தியாவில், ஏப்ரல் 1, 2019ம் ஆண்டுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். HSRP என்பது எரிபொருள் வகையை குறிக்கும் வண்ண குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது ஆன்லைனில் முடிக்கக்கூடிய எளிதான செயலாகும். இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம் ‘இந்தியா’ என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கும். அதேபோல், ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்கள் தற்போது பிப்ரவரி 17, 2024ம் ஆண்டுக்கு முன்பு பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையை பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டு உள்ளது. உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உங்கள் காருடன் இணைக்கப்பட்ட அலுமினிய உரிமத் தகடுதான் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) என்று அழைக்கப்படுகிறது. நீல நிற ஹாலோகிராமில் குரோமியம் அடிப்படையிலான அசோக சக்ரா சின்னம் HSRP உடன் சேர்க்கப்பட்டுள்ளது. HSRP தகடு 10 இலக்க PIN அல்லது நிரந்தர அடையாள எண், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழ் இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 மிமீ நீளம் மற்றும் 20 மிமீ அகலம் ஆகியவை தட்டின் பரிமாணங்கள் ஆகும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.