TAMIL-NADU

'கலைஞர் எனும் தாய்' முதல்வர் ஸ்டாலின் வெளியிட பெற்று கொண்டார் ரஜினிகாந்த்

கலைஞர் நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி ஹிந்து குழுமத் தலைவர் என் ராம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். புத்தக வெளியீட்டிற்கு பிறகு கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் காட்சி வடிவத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். #JUSTIN பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் #Karunanidhi #MKStalin #Rajinikanth | pic.twitter.com/qHzeKPtLrm புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக சார்பில் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தி இந்து குழுமத் தலைவர் ராம், ஒரே மேடையில் 2 பஸ் கண்டெக்டர்ஸ்.. ஒருவர் ரஜினி.. மற்றொருவர்? யார் என கேட்டபொழுது விழா அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. கலைஞர் எப்போதும் தேசிய அரசியலில் கவனம் செலுத்தியவர், அதேபோல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார், அதனால் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார். அமைச்சர் எ.வ.வேலு ஒரு பஸ் கண்டக்டராக பணியாற்றியவர். இந்த மேடையில் இரண்டு பஸ் கண்டக்டர் இருக்கிறார்கள். ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் மற்றொருவர் மிக முக்கியமான துறையின் அமைச்சராக இருக்கிறார்; இதுதான் தமிழ்நாட்டின் சிறப்பு என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.