TAMIL-NADU

ரஜினி அறிவுரையை புரிந்து கொண்டேன்.. எதிலும் தவறிட மாட்டேன்.. உஷாராக இருப்பேன் - முதல்வர் ஸ்டாலின்

ரஜினி கூறிய அறிவுரையை புரிந்துகொண்டேன், எதிலும் தவறிட மாட்டேன், உஷாராக இருப்பேன் என்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” புத்தகம் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ரஜினிகாந்த்தின் பேச்சை கேட்டு குலுங்கி சிரித்தனர். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய வரைபடத்தில் பெரிய இடத்தில் இடம்பெறாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த கலைஞருக்கு இன்று இந்திய அரசு நாணயம் வெளியிடுகிறது என்றால் அவரை உடன்பிறப்புகளாய் நாம் இருக்கிறோம் என்பது தான் பெருமை அளிக்கிறது. எ.வ.வேலு மகன் திருமணத்தின் போது ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டத்தை செயல்படுத்தியதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், எ.வ.வேலுவை பாராட்டினார். வேலுவை போன்று அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டால் நல்லது என பாராட்டியவர் கலைஞர். கலைஞர் மனதில் நினைப்பதை அறிந்து செயல்படுத்தியவர் எ.வ.வேலு, இன்று எனக்கும் அதுபோன்று தான் உள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல், நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல் கலைஞர் நினைவகம் என அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்தவர் எ.வ.வேலு. திமுகவிலும் அவர் பல பணிகளை சிறப்பாக செய்துள்ளார். மிசா காட்சிகளை விவரிக்கப்பட்ட போது நான் தாக்கப்பட்ட காட்சிகளும் இந்த புத்தகத்தில் வருகிறது. மிசாவில் கைது செய்யப்பட்ட திமுகவினரை சந்திக்க அவரது குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என சிறைத்துறைக்கு கோரிக்கை விடுக்கிறார் கலைஞர். உங்கள் மகனை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம் என பதில் வருகிறது. கைது செய்யப்பட்ட அனைத்து திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரை பார்த்த பின் இறுதியாகதான் என்னை சந்தித்தார் கலைஞர். #JUSTIN ரஜினிகாந்த் - சீனியர்களை நல்லா சமாளிக்கிறீங்க… Hats off to you ஸ்டாலின் சார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ரஜினி கூறிய அறிவுரையை புரிந்துகொண்டேன், உஷாராக இருப்பேன்… #Karunanidhi #MKStalin #Rajinikanth | pic.twitter.com/IMgYH4d7wP — Tamil Nadu August 24, 2024 இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து என்னை ஊக்கப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த். என்னை விட வயதில் மூத்தவர்.எனக்கு அறிவுரை கூறிய ரஜினிகாந்த் நீங்கள் சொன்னதை நான் புரிந்துகொண்டேன், பயப்பட வேண்டாம், என்றும் நான் தவறிவிட மாட்டேன் ; நீங்கள் மனம் திறந்து பாரட்டியதற்கு நன்றி என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.