CHENNAI

சென்னையில் பவர்கட்... நாளை (25ம் தேதி) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு!

சென்னையில் நாளை (செப்டம்பர் 25ஆம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 25ஆம் தேதி) புதன்கிழமை தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி சென்னையில் நாளை எந்தெந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை : வடக்கு டெர்மினல் சாலை, டி.எச். சாலையில் ஒருபகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்துதெரு, அசோக் நகர், திசையன் நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணா தெரு, மின்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏ.இ. கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, குறுக்கு தெரு, சிவம் நகர், மங்கலம் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி. குடியிருப்பு. கோயம்பேடு: ஸ்ரீநிவாசா நகர், பக்த்வாச்சலம் தெரு, செம்தம்மன் நகர், பி.எச். சாலை, மேட்டுகுளம், புது காலனி, திருவேத்தி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், ஆல்வார்திரு நகர் பகுதி, நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அலகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர். வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 - 10 பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்ட பகுதி, திரு நகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெய்ன் தெரு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகனாதன் நகர், உயர்நீதிமன்ற தெற்கு காலனி. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.