CHENNAI

ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.. பின்னணி என்ன?

ஆர்.என்.ரவி துணைவேந்தர் இல்லாமல், தென்னிந்தியாவின் பழமையான சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் ஆளுநரும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்றதுதான். இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று மெட்ராஸ் பல்கலைக்கழகம். எழில்மிகு மெரினா கடற்கரையோரம் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் ராதாகிருஷ்ணன் முதல் ஏபிஜே அப்துல் கலாம் வரை 5 குடியரசுத் தலைவர்களை தந்துள்ளது. மேலும் சர்.சி.வி ராமன் போல புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும் உருவாக்கியுள்ளது. இப்படி பல திறமையாளர்களை உருவாக்கிய சென்னை பல்கலைகழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. பட்டங்கள் வழங்கப்படாததால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க முடியாத நிலையும், வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரசியல்வாதிகளும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செப்டம்பர் 24 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று பல்கலைக்கழக வேந்தரும், ஆளுருமான ஆர்.என்.ரவி அறிவித்தார். இதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். உயர்கல்வி துறையின் செயலாளர் பிரதீப் யாதவன் கையொப்பமிட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் சிறப்பு, நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றதுதான். பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கமாட்டேன் என ஆளுநர் கூறியிருந்த நிலையில், அவர் பங்கேற்ற பல பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார். இதனிடையே தமிழகத்தில் உயர் கல்வி மோசமாக இருப்பதாக ஆளுநர் பேசியது, உரசலை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில்தான் மெட்ராஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் மேடையை பகிர்ந்து கொண்டார் அமைச்சர் பொன்முடி. முன்னதாக ஆளுநரும் வேந்தருமான ஆர்.என். ரவியை பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார் பொன்முடி. இந்த திடீர் சமரசம் ஆளுநருக்கு நெருக்கடியா? அல்லது பொன்முடிக்கு நெருக்கடியா? என பல அரசியல் கேள்விகளை கட்டவிழித்துவிட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் மாணவர்களுக்கு பட்டம் கிடைச்சுருச்சி பசங்க என்ஜாய்..நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் லிபிகா பழனிவேல். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.