CHENNAI

தொழில் வரி 35% வரை உயர்வு... சென்னையில் எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு? - முழு விவரம்!

சென்னை மாநகராட்சியில் வசிப்போருக்கான தொழில் வரி 35 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீக்கடைக்கான தொழில் உரிமம் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஜெ.குமரகுருபரன் முதன்முறையாக பங்கேற்றார். கூட்டம் தொடங்கியதும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மதிமுக கவுன்சிலர்கள், பட்ஜெட் நகலை கிழித்து போராட்டம் நடத்தினர். 72 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மாடுகளை சாலைகளில் திரிய விடும் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட வந்த 5000 ரூபாய் அபராதம், 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 15,000 ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு செலவிற்கு மூன்றாம் நாளில் இருந்து, நாள் ஒன்றிக்கு 1000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. இதையும் படிக்க: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை இதேபோல் மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றுவோருக்கான தொழில் வரியும் 35 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எவ்வித தொழில் வரியும் இல்லை. 21 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிப்போருக்கு 180 ரூபாயும், 30 ஆயிரத்து ஒரு ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு 430 ரூபாயும், 45 ஆயிரத்து ஒரு ரூபாயிலிருந்து 60 ஆயிரம் வரை வருமானம் பெறுவோருக்கு 930ம், 60 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவோருக்கு 1025ம் வசூலிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 75 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு மேல் சம்பவம் பெறுவோரிடம் வசூலிக்கப்பட்ட வந்த ஆயிரத்து 250 ரூபாய் வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதேபோல மாநகராட்சியில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமம் கட்டணம் 30,000 ரூபாய் வரை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டீ கடைகளுக்கு குறைந்தபட்சமாக 2 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் உரிமக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மாநகராட்சி சார்பில் நிறைய பணிகள் நடைபெறும் நிலையில், நிதி தேவை இருப்பதால், சுய வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. தொழில் வரி 35% உயர்வு ரூ.21,000 வரை (6 மாதம்) வரி இல்லை ரூ.21,001 - ரூ.30,000 ரூ.180 ரூ.31,001- ரூ.45,000 ரூ.430 ரூ.45,001 - ரூ.60,000 ரூ.930 ரூ.60,001- ரூ.75,000 ரூ.1025 ரூ.75,000க்கு மேல் ரூ.1,250 (மாற்றமில்லை) தொழில் உரிமக் கட்டணம் உயர்வு (ரூபாய் சிம்பல்) குறைந்தபட்சம் அதிகபட்சம் பேக்கரி ரூ.2,000 ரூ 10,000 பியூட்டி பார்லர் ரூ.1500 ரூ.6,000 சலூன் ரூ.500 ரூ.10,000 ஜூஸ் கடை ரூ.1,500 ரூ.10,000 சலவை கடை (மனிதர் இயக்குவது) ரூ.3,000 ரூ.10,000 நகைக்கடை ரூ. 1,500 ரூ.20,000 மளிகை கடை ரூ.3,500 ரூ.10,000 நாட்டு மருந்துகடை ரூ.1,500 ரூ.10,000 ஐஸ் க்ரீம், குளிர்பான கடை ரூ.1,500 ரூ.10,000 கோழி, ஆடு இறைச்சிக் கடை ரூ.2,000 ரூ.10,000 பால் கடை ரூ.2,000 ரூ.10,000 காய், பழ கடை ரூ.1,500 ரூ.10,000 மீன் கடை ரூ.3,000 ரூ.20,000 டீ கடை ரூ.2,000 ரூ.10,000 ஹோட்டல்கள், கேன்டீன்கள் ரூ.5,000 ரூ.20,000 திருமண மண்டபங்கள் ரூ.10,000 ரூ.30,000 None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.