CHENNAI

Chennai Rains | கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலங்கள் - சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 16 ஆம் தேதி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சென்னை நகரவாசிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளத்தின்போது பாதிக்கப்படும் பிரதான பகுதியாக வேளச்சேரி இருந்து வருகிறது. இதனால் தங்களது கார்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டி வேளச்சேரி மேம்பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் கார்களை நிறுத்தியுள்ளனர். அதேபோல பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் பொதுமக்கள் தங்களது கார்களை நிறுத்தியுள்ளனர். சென்ற ஆண்டு நிகழ்ந்ததைப் போன்று இந்த ஆண்டு நிகழக்கூடாது என்பதற்காகவே கார்களை நிறுத்தியுள்ளதாக வேளச்சேரி, அடையாறு சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர். மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால், மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதங்களை விதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூஸ்18 செய்தி வெளியிட்ட நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. For public information.... #Chennairainupdate pic.twitter.com/vyFphEkPMq இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கனமழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மேம்பாலங்கள் மீது நிறுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவதாக வரும் தகவல் தவறானது. இதுவரை எந்த வாகனத்திற்கும் அதுபோல அபராதம் விதிக்க்கப்படவில்லை என்ற விளக்கமளித்துளது. மேலும் கனமழை நேரங்களில் மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அணுகினால் சரியான வாகன நிறுத்தம் இடம் குறித்த தகவல் பகிரப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு மற்றும் கிழக்கு பகுதியைச்சேர்ந்தவர்கள் 044 - 23452362 என்ற எண்ணிலும் வடக்கு, மேற்கு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் 044 -23452330 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெருமழையின் போது தங்களது கார்களை இழந்ததாக வேளச்சேரி மக்கள் தெரிவித்தனர். இந்தாண்டு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.