NATIONAL

Ratan Tata: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்!

21 குண்டுகள் முழங்க ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையும் படிக்க: டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் யார்? தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மாலை 5:30 மணி அளவில், தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் ரத்தன் டாடாவின் உடல் வொர்லி தகன மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ் செய்திகள் / இந்தியா / Ratan Tata: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்! Ratan Tata: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்! பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 10, 2024, 9:04 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் 21 குண்டுகள் முழங்க ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விளம்பரம் இதையும் படிக்க: டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் யார்? தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். உங்கள் உணவில் வெங்காயத் தோலைப் பயன்படுத்துவதற்கான 5 வழிகள்.! மேலும் செய்திகள்… இதனைத்தொடர்ந்து மாலை 5:30 மணி அளவில், தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் ரத்தன் டாடாவின் உடல் வொர்லி தகன மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Ratan TATA First Published : October 10, 2024, 9:04 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.