NATIONAL

Tirupati | தப்பித்த சென்னை... சிக்கிய ஆந்திரா... வானிலை மாற்றத்தால் திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி மலைப் பாதையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், ‘‘ஸ்ரீவாரி மெட்டு’’ வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி செல்லும் மலைப்பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏழுமலையான் கோயில் வளாகத்திலும் மழை நீர் தேங்கியது. கனமழையால் திருப்பதி வனப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் சாலை அருகே மாலாடிகுண்டம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ‘‘ஸ்ரீவாரி மெட்டு’’ வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேபோன்று திருமலையில் உள்ள ‘‘பாபவிநாசனம் தீர்த்தம், ஆகச கங்கா’’ உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஓடு பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், ஹைதராபாத்தில் இருந்து வந்த ‘‘இண்டிகோ’’ விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. இதேபோன்று, திருப்பதி வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டன. சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. Also Read | Chennai Rain: கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… அதிகாலை 4.30 மணிக்கு நடந்த சம்பவம் - வானிலை மையம் முக்கிய தகவல்! விஜயவாடாவில் கனமழையால், மகளிர் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலை 4.30 மணிக்கு கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஆந்திராவில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.