NATIONAL

"இந்தியாவின் தலைசிறந்த மகன் ரத்தன் டாடா" – ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி புகழாரம்!

நினைவஞ்சலி கூட்டத்தில் உரையாற்றும் நீடா அம்பானி ரத்தன் டாடா இந்தியாவின் சிறந்த மகன் என்றும் அவரை நாம் இழந்துவிட்டோம் என்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, வயது மூப்பு மற்றும் அது சார்ந்த உடல்நலக்குறைவால் கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் சமூக பங்களிப்புக்காக 2000-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2008-ல் பத்ம விபூஷன் விருதும் அளித்து கவுரவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது ரத்தன் டாடாவுக்கு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என பரிந்துரைக்க மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதேபோன்று ரத்தன் டாடாவின் மறைவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டுதோறும் நடத்தும் தீபாவளியையொட்டி விருந்தின்போது ரத்தன் டாடாவுக்கு புகழாரம் சூட்டப்பட்டது. கூட்டத்தின்போது பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி, ‘ 4 நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தலைசிறந்த மகனை நாம் இழந்தோம். ரத்தன் டாடாவின் மறைவு நமக்கு மீள முடியாத துயரத்தை அளித்துள்ளது. Nita and Mukesh Ambani, their family members, Reliance leadership and thousands of employees pay tribute to Shri Ratan Tata at the Reliance Industries Annual Diwali dinner. Nita Ambani called him a 'Great Son of India', a visionary industrialist and philanthropist who always… pic.twitter.com/kQQAgc0d2o எனது மாமனார் மற்றும் எனது கணவர் முகேஷ் அம்பானி மற்றும் எங்களது குடும்பத்தினருக்கு ரத்தன் டாடா நெருங்கிய நண்பர். எனது மகன் ஆகாஷுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். தொலைநோக்கு சிந்தனை கொண்ட தொழிலதிபர், உதவுவதில் தாராள தன்மை கொண்டவர் ரத்தன் டாடா. சமூகம் எப்போதும் மேம்பட வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து உழைத்தார்’ என்று அவர் பேசினார். இந்தியாவின் சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் ரத்தன் டாடா என்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வின்போது ரத்தன் டாடா மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.