NATIONAL

Ratan Tata | ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கு... எங்கு, எப்போது? - வெளியான தகவல்

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கு விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும் யார் யார் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள் என்கிற விவரமும் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்தில் காலை 10 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்து, இஸ்லாம், சீக்கிய மத பிரதிநிதிகள் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். பொதுமக்களுடன் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். மத்திய அரசு சார்பில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ரத்தன் டாடாவுக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையும் படிக்க..| Ratan tata | வினையாக வந்த இந்தியா - சீனா போர்… ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா? பொதுமக்கள் 5 மணிநேரம் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் மாலை 4.30 மணி அளவில் அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் எனவும், மும்பையின் வொர்லியில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ரத்தன் டாடாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கில் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தொழிலதிபர் கவுதம் அதானி, ஆனந்த் மஹிந்திரா, யோக் குரு பாபா ராம்தேவ் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதுதவிர, ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சிராக் பஸ்வான், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.