NATIONAL

சாந்தனு நாயுடு.. ரத்தன் டாடாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி..?

ரத்தன் டாட்டா வயது வித்தியாசமெல்லாம் கிடையாது, எந்த தலைமுறையும் என் தோளில் கைப்போட்டுக்கொண்டு பேசலாம், என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்தான் ரத்தன் டாடா என்னும் மிகப்பெரும் ஆளுமை. தலைமை பண்புக்கு இவரை மிஞ்ச இனி எவரும் உண்டோ என்று பேசும் அளவுக்கு ஒரு மாற்றத்தை தொழில்முணைவோர்களிடம் விதைத்துவிட்டு சென்றிருகிறார் ரத்தன் டாடா. அதற்கு சான்றுதான் இன்று பலரும் பேசும் 31 வயதேயான சாந்தனு நாயுடு. இஞ்சினியரிங் முடித்துவிட்டு இன்டர்னாக டாடா குழுமத்துடன் இணைந்தவர்தான் சாந்தனு நாயுடு. அவருடைய கடின உழைப்பு, தனித்துவமான அணுகுமுறை, வித்தியாசமான யோசனைகள் இவையே அவரை ரத்தன் டாடாவின் ஜெனரல் மேனேஜராக நியமிக்க வைத்துள்ளது. 86 வயதான ரத்தன் டாடா புதன் கிழமை நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அக்டோபர் 7, 2024 தேதி வயது காரணமாக ஏற்படும் இரத்த அழுத்த பிரச்சனைக்காக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். சாந்தனு ஆரம்பகால வாழ்க்கை சாந்தனு நாயுடு சாவிதிரி பாய் பூலே பூனே பல்கலைக்கழத்தில் 2014 ஆம் ஆண்டு மெக்கானிகல் இஞ்சினியரிங் முடித்தவர். பின் கார்னெல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் MBA பட்டம் பெற்றார். அங்கு படித்துக்கொண்டிருக்கும் போதே பல தலைமை பொறுப்புகளில் இருந்திருக்கிறார். அதற்காக அவர், ஹெம்மீட்டர் தொழில்முனைவோர் விருது (Hemmeter Entrepreneurship Award) மற்றும் ஜான்சன் தலைமைத்துவ வழக்கு போட்டி (Johnson Leadership Case Competition)ஆகிய விருந்துகளையும் பெற்றிருக்கிறார். டாடாவில் இணைந்த தருணம்.. டாடா எல்க்சியில் ஆட்டோமொபைல் டிசைன் இன்ஜினியராக பணியாற்றிய காலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நல பாதுகாப்புக்காக ’Motopaws’என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் வாகனங்களின் வேகத்தால் இரவில் தெரு நாய்களின் விபத்துகளை தடுக்க முன்னெடுப்புகள் செய்திருக்கிறார். பின் இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியில் முதலீடு செய்ய வேண்டி ரத்தட் டாடாவுக்கு சாந்தனு கடிதம் எழுதுகிறார். பின் நாய்கள் மீது தீரா அன்பு கொண்ட ரத்தன் டாடா சாந்தனுவின் இந்த முன்னெடுப்பு முயற்சியை கண்டு மிகவும் வியந்திருக்கிறார். பின் நேரடியாகவே அவரை அழைத்து பேசியிருக்கிறார். அப்போது அவருடைய பேச்சாலும் , சிந்தைகளாலும் ஈர்க்கப்பட்ட ரத்தன் டாடா அவருக்கான பணத்தை உடனே தந்து அவருடைய திட்டங்களை எந்தவித தடைகளுமின்றி செயல்படுத்த ஆரதவு தந்தார். அதோடு அவர்களுடைய நட்பும் தொடர்ந்திருக்கிறது. ’Motopaws’உருவாக்கிய தாக்கம் சாந்தனு தலைமையில் Motopaws சிறந்த குழுவாக உருவாகியது. குறிப்பாக அவரின் தனித்துவமான யோசனைகளும், குழுவை திறம்பட நிர்வகிக்கும் பொறுப்பும் அந்த குழுவை சிறந்த நோக்கத்திற்கான அமைப்பாக விளங்கியது. விபத்துகளை தடுக்க மறுசுழற்சி பொருட்களை வைத்து புலிகளுக்கு சென்சார் மூலம் செயல்படும் anti-poaching devices மற்றும் நாய்களுக்கு ரிஃப்ளெக்டிவ் டெனிம் காலர்களும் வடிவமைத்தார். இந்த முயற்சியால் விலங்குகளின் விபத்துகள் கணிசமாக குறைந்தது. இந்த முயற்சி இந்திய அளவில் கவனம் ஈர்க்கச் செய்தது. இது ரத்தன் டாடாவிற்கு அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. மேலும் இது அவருடன் நெருக்கமாக இணைவதற்கான ஒரு கதவாகவும் இருந்தது. அடுத்ததாக 2021-ம் ஆண்டு சாந்தனு Goodfellows என்னும் ஸ்டார்ட் அப்பை தொடங்கினார். அதன் மூலம் இந்தியாவில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தியாவில் சமூகத்திலிருந்து விலகி வீட்டிற்குள்ளேயே முடங்கி தனிமையில் இருக்கும் முதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அதோடு அவர்களுக்கு துணையாக இருந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதே இந்த குழுவின் நோக்காமாக இருந்தது. இன்டர்ன் டூ ரத்தன் டாட்டா மேனேஜர் 2018 ஆம் ஆண்டிலிருந்து சாந்தனு நாயுடு ரத்தன் டாடா என்னும் பெரும் ஜாம்பவானுக்கு மேனேஜராக பொறுப்பேற்றார். டாடாவின் வழிகாட்டுதல் படி பல வகையான பொறுப்புகளை செய்து வந்தார். இப்படி 7 ஆண்டுகளாக இவர்களுக்கிடையே பரஸ்பரமான மரியாதை, நம்பிக்கை, பொறுப்பு, தலைமைப் பண்பு, நண்பன் என தொழில்முறை நெறிமுறைகளுக்கு களங்கமில்லாத வண்ணம் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது இவர்களது உறவு… எதிர்காலம்..? சாந்தனு டாடாவின் மேனேஜர் மட்டுமல்ல அவர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கிறார். அவர் 2021-ஆம் ஆண்டு Harper Collins பதிப்பகத்தில் “I Came Upon a Lighthouse” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இப்படி பல இளம் தொழில்முணைவோர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். அதோடு சமூகத்தில் பல மாற்றங்களை செய்ய காத்துக்கொண்டிருக்கும் சாந்தனு டாடாவின் தலைமைப் பண்பையும் அவரின் கருணை குணத்தையும் தன் தோள் மீது சுமந்து பயணத்தை தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.