NATIONAL

ரத்தன் டாடா முதல் வேலைக்கான ரெஸ்யூமை எப்படி தயார் செய்தார் தெரியுமா..? சுவாரஸ்யமான பதிவு..!

ரத்தன் டாட்ட மூத்த தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் கவுரவ தலைவர், ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் கார்னெல் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் பி.எஸ்சி கட்டிடக்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் ஜோன்ஸ் & எம்மன்ஸ் உடன் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு 1962-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். டாடா ஒரு நேர்காணலின் போது ஒரு கதையை பகிர்ந்து கொண்டார். அதில் ரத்தன் டாடா ஐபிஎமில் வேலை செய்தது அவருடைய வழிகாட்டியாக இருந்த JRD டாடாவுக்கு பிடிக்கவில்லை எனவும், அதனால் அவரை டாடாவில் இணைய ரெஸ்யூம் அனுப்பும்படி கூறியிருக்கிறார். அதற்காக அவர் எப்படி அந்த ரெஸ்யூமை தயார் செய்தார் என்பதை ஒரு நேர்காணல் பேட்டி ஒன்றி கூறியிருந்தார். அந்த பேட்டியில், தனது பாட்டியின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்து 1962-ல் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி இருக்கிறார், அப்போதுதான் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து வேலை தேட முடிவெடுத்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஐபிஎம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரத்தன் டாடா மேலும் விளக்கமளிக்கையில், “நான் IBM அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஜே.ஆர்.டி.டாடா ஒரு நாள் என்னை அழைத்து, இந்தியாவில் இருக்கும் போது உங்களால் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என்று கூறினார். எனவே என்னுடைய ரெஸ்யூமை உடனே அனுப்பும்படி கூறினார். அந்தசயமத்தில் என்னிடம் இல்லாத எனது பயோடேட்டாவை எப்படி அனுப்புவது.. இது என்ன எனக்கு வந்த சோதனை என நினைத்துக்கொண்டு, அலுவலகத்தில் எலக்ட்ரானிக் டைப்ரைட்டர்கள் இருந்ததால், ஒரு நாள் மாலையில் அமர்ந்து ரெஸ்யூமை டைப் செய்து ஜேஆர்டி டாடாவுக்கு அனுப்பினேன். இதன் மூலம் டாடா குழுமத்தில் எனக்கு முதல் வேலை கிடைத்தது” என தனது ரெஸ்யூம் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். Also Read | சாந்தனு நாயுடு.. ரத்தன் டாடாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி..? டாடா இண்டஸ்ட்ரீஸில் முதல் வேலை… JRD டாடாவுக்கு விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு, ரத்தன் டாடாவுக்கு டாடா குழுமத்தின் விளம்பர நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸில் முதல் வேலை கிடைத்தது. 1963 இல் TISCO (இப்போது டாடா ஸ்டீல்) இல் சேருவதற்கு முன்பு அவர் டெல்கோவில் (இப்போது டாடா மோட்டார்ஸ்) ஆறு மாதங்கள் கழித்தார். இதன் மூலம், ரத்தன் டாடாவுக்கு வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட்டன, மேலும் அவர் டாடா குழுமத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். ஜாம்ஷெட்பூர் ஸ்டீல் தொழிற்சாலையில் பயிற்சி பெற்றவர் தகவல்களின்படி, ரத்தன் டாடா, டாடா குழுமத்தில் தனது பணியை ஜாம்ஷெட்பூர் ஸ்டீல் தொழிற்சாலையில் இருந்து தொடங்கினார். ஆறு வருடங்கள் அங்கு பணிபுரிந்தார். ஆரம்பத்தில் அவர் நீல நிற ஆடைகளை அணிந்து கடைநிலை தொழிலாளியாகவே தனது பயிற்சியை தொடங்கியிருக்கிறார். அதுதான் அவரின் தொழில் சிந்தனைகள் நடுத்தர குடும்பங்களை சார்ந்தே இருந்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.