NATIONAL

வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் கோச் எப்போது இயக்கப்படும்..? பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

வந்தே பாரத் ரயில் நாட்டில் ரயில் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பரவலான வெற்றியைத் தொடர்ந்து, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது விரைவில் அதன் வணிக பயணத்தை தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்லீப்பர் ரயில் BEML-லிருந்து இன்ட்டகிரல் கோச் ஃபேக்ட்ரிக்கு (ICF) விரைவில் சென்றடைய உள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பிட்ட இந்த ரயிலின் வெவ்வேறு பாராமீட்டர்ஸ்களை சரிபார்க்க oscillation சோதனையை ICF நடத்தும். பின்னர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பொதுமக்களுக்காக அதன் வணிக ஓட்டத்தைத் தொடங்கும் முன் ஸ்டெபிலிட்டி ட்ரையல், ஸ்பீட் ட்ரையல் உள்ளிட்டவையும் நடத்தப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை டிசம்பரில் இருந்து வணிக ரீதியாக இனிய ரயில்வே இயக்க தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் முதல் கமர்ஷியல் ரன் தொடங்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரிகள் விரைவில் இறுதி முடிவு எடுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் கட்டணம், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போலவே இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே கூறியிருந்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் USB சார்ஜிங், யூனிஃபைட் ரீடிங் லைட், விஷுவல் இன்பர்மேஷன் சிஸ்டம், இன்சைட் டிஸ்பிளே பேனல், செக்யூரிட்டி கேமராக்கள் மற்றும் மாடுலர் பேன்ட்ரி போன்ற அனைத்து நவீன வசதிகளும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி பயணிகளுக்கு, குளிக்க வெந்நீர் கிடைப்பதை ரயில்வே உறுதி செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்றும் இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை தொடும் என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார். மேலும் பயணிகளுக்கான பாதுகாப்புடன், லோகோ பைலட் மற்றும் அட்டடென்டென்ட்ஸ்களுக்கான வசதிகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். Also read | ஸ்டீயரிங்கே கிடையாது.. முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக்காக இயங்கும் டெஸ்லா அசத்தல் பேருந்து! மேலும் இந்த ரயிலில் 11 ஏசி 3 tier, 4 ஏசி 2-tier மற்றும் 1 ஏசி-முதல் வகுப்பு என 16 பெட்டிகள் இருக்கும். மேலும் இந்த ரயிலில் மொத்தம் 823 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் வசதி இருக்கும் என கூறப்படுகிறது . இதனிடையே புதுடெல்லி மற்றும் ஜம்மு&காஷ்மீர் இடையே ரயில் இணைப்பை மேம்படுத்த, இந்திய ரயில்வே வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்க பரிசீலித்து வருவதை ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.