NATIONAL

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு.. கொலையாளிகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

மும்பையில் கடந்த 12ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இதுவரை குர்மைல் பல்ஜித் சிங், தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கொலையாளிகள், பாபா சித்திக்கை கொலை செய்ய இதற்கு முன் 10 முறை முயற்சி செய்தததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தால் பாபா சித்திக்கை கொலை செய்ய முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரம் அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் பாபா சித்திக் வரமாட்டார். சில நேரங்களில் பாபா சித்திக்குடன் வேறு சிலர் இருப்பார்கள். இது போன்ற காரணங்களால் 10 முறை அவர் தப்பித்து விட்டதாக கொலையாளிகள் தெரிவித்துள்ளனர். பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரவீன் லோங்க்ர் மற்றும் அவரது சகோதரர் சுபம் லோங்கர் ஆகியோர் இந்த கொலைக்கு பின்னிருந்து உதவியிருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்த பிரவீன்லோங்கர், கொலையாளிகளுக்கு, நோட்டம் விடுவதற்கு வசதியாக இருசக்கரவாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். தனக்குத் தெரிந்த ஹரிஸ்குமார் பாலக்ராம் என்பரிடம் பணம் கொடுத்து பழைய இருச்சக்கர வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த ஹரிஸ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுபம் லோங்கர், கொலையாளிகளுக்கு 4 லட்சம் ரூபாய் பணத்தை பிரித்துக் கொடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. இதையும் படியுங்கள் : கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! கொலை நடந்த அன்றைய தினம் பாபா சித்திக், பாந்திரா தொகுதி எம்.எல்.ஏ-வும், அவரது மகனுமான ஜீஸ்கான் உடைய அலுவலகத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். அப்போது, காவலர்களை திசை திருப்ப கொலையாளிகள் அப்பகுதியில் பட்டாசு வெடித்துள்ளனர். காவலர்களின் கவனம் திசைதிரும்பியதும், கொலையாளிகள் 6 ரவுண்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 3 தோட்டாக்கள் பாபா சித்திக் மீது பட்டுள்ளது. மற்றொரு குண்டு அருகில் இருந்தவரரின் காலில் பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 7.62 எம்.எம். துப்பாக்கி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொலையை கச்சிதமாக செய்துமுடிக்க கொலையாளிகள் குர்மைல் சிங் மற்றும் தர்மராஜ் இருவரும் யூடியூப் வீடியோக்களை பார்த்து துப்பாக்கி சுட கற்றுக்கொண்டதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். கொலையாளிகளுக்கு பாபா சித்திக்கை அடையாளம் காட்டுவதற்காக அவரது புகைப் படத்தை வழங்கி உள்ளனர். வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாபா சித்திக் கொலை செய்யும் அந்த நாளுக்கு முன்னதாகவே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர். இதற்கிடையே சல்மான் கான் மீதான தங்கள் விரோதத்தை பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக அறிவித்துள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.