LIVE-UPDATES

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள்… முதலிடத்தில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை அந்த அணி பிடித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. இதில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த கிரிக்கெட் தொடர் 2021 –ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்போது நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதியதில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2025 ஆம் ஆண்டில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இதற்கான பாயிண்ட்ஸ் டேபிளில்இடம்பெற்றுள்ள அணிகள் குறித்த விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி 54 புள்ளிகள் மற்றும் 56.25 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 26 புள்ளிகள் மற்றும் 54.16 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. முகப்பு / Breaking and Live Updates / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள்… முதலிடத்திற்கு ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள்… முதலிடத்திற்கு ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்… ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதியதில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : January 6, 2024, 9:12 pm IST Follow us on Published By : Musthak உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை அந்த அணி பிடித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. இதில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். விளம்பரம் இந்த கிரிக்கெட் தொடர் 2021 –ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்போது நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதியதில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2025 ஆம் ஆண்டில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இதற்கான பாயிண்ட்ஸ் டேபிளில்இடம்பெற்றுள்ள அணிகள் குறித்த விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. விளம்பரம் இதன்படி 54 புள்ளிகள் மற்றும் 56.25 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 26 புள்ளிகள் மற்றும் 54.16 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... First Published : January 6, 2024, 9:12 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.