LIVE-UPDATES

பேனரை அகற்றியதால் கொலைவெறி தாக்குதல்... பாஜகவினர் 6 பேர் கைது...

சென்னை ஆர்.கே. நகரில் சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில், பாட்டிலை உடைத்து திமுகவினரை குத்திய பாஜக-வைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆர்.கே. நகரில் இரு தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக அரசு வழங்கி வரும் ரூ.6,000 குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன. பாஜகவைச் சேர்ந்த வேலு மற்றும் சில பாஜகவினர் அந்த பேனரை வைத்திருந்தனர். இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் பிரிவினை சார்ந்த காளிதாஸ் மற்றும் நிர்வாகி முருகேசன் ஆகியோர் போலீசாரிடம் முறையிட்டனர். இதையடுத்து காவல்துறையின் அந்த பேனரை அகற்றினர். இதனால் பேனர் வைத்த வேலு உள்ளிட்டோர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் காளிதாசன் மற்றும் முருகேசன் இருவரும் தங்களது பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து காளிதாசன் பின்புறத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். மேலும், முருகேசனையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கி கையை உடைத்தது. ரத்தம் சொட்ட சொட்ட வலியில் துடித்துக் கொண்டிருந்த காளிதாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.நகர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். இரவோடு இரவாக பாஜகவை சேர்ந்த வேலு, கார்த்திக், சதீஷ், சந்தோஷ்குமார், பாலாஜி, மோகன்ராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்த போலீசார் நீதிமன்ற ஆஜருக்கு பின் சிறையில் அடைத்தனர். இதில் கைதான வேலு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக பிரமுகர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முகப்பு / Breaking and Live Updates / பேனரை அகற்றியதால் கொலைவெறி தாக்குதல்... திமுகவினரை பாட்டிலால் குத்திய பாஜகவினர்... பேனரை அகற்றியதால் கொலைவெறி தாக்குதல்... திமுகவினரை பாட்டிலால் குத்திய பாஜகவினர்... ரூ.6,000 வெள்ள நிவாரண நிதியை விமர்சித்து வைத்த பேனரால் இருதரப்புக்கும் தரகாறு ஏற்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : December 18, 2023, 10:31 pm IST Follow us on Published By : Alaguvel Pandian தொடர்புடைய செய்திகள் சென்னை ஆர்.கே. நகரில் சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில், பாட்டிலை உடைத்து திமுகவினரை குத்திய பாஜக-வைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆர்.கே. நகரில் இரு தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக அரசு வழங்கி வரும் ரூ.6,000 குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன. பாஜகவைச் சேர்ந்த வேலு மற்றும் சில பாஜகவினர் அந்த பேனரை வைத்திருந்தனர். இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் பிரிவினை சார்ந்த காளிதாஸ் மற்றும் நிர்வாகி முருகேசன் ஆகியோர் போலீசாரிடம் முறையிட்டனர். இதையடுத்து காவல்துறையின் அந்த பேனரை அகற்றினர். இதனால் பேனர் வைத்த வேலு உள்ளிட்டோர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். விளம்பரம் இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் காளிதாசன் மற்றும் முருகேசன் இருவரும் தங்களது பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து காளிதாசன் பின்புறத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். மேலும், முருகேசனையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கி கையை உடைத்தது. ரத்தம் சொட்ட சொட்ட வலியில் துடித்துக் கொண்டிருந்த காளிதாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.நகர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். இரவோடு இரவாக பாஜகவை சேர்ந்த வேலு, கார்த்திக், சதீஷ், சந்தோஷ்குமார், பாலாஜி, மோகன்ராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்த போலீசார் நீதிமன்ற ஆஜருக்கு பின் சிறையில் அடைத்தனர். இதில் கைதான வேலு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக பிரமுகர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: banner case , BJP , DMK First Published : December 18, 2023, 10:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.