LIVE-UPDATES

Live : திருச்சி வரும் பிரதமர் மோடி.. பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

விமான நிலைய புதிய முனையம் உட்பட 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முகப்பு / Breaking and Live Updates / Live : PM Modi in Trichy | திருச்சி வரும் பிரதமர் மோடி.. பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு AUTO REFRESH OFF ON Live : PM Modi in Trichy | திருச்சி வரும் பிரதமர் மோடி.. பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு PM Modi in Trichy | பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர்…. அதிமுக சார்பில் பிரதமரை சந்திக்க யாரும் செல்லவில்லை…. 1-MIN READ Published By: Vijay Ramanathan Tamil Last Updated : January 2, 2024, 7:38 am IST Tiruchirappalli,Tamil Nadu விமான நிலைய புதிய முனையம் உட்பட 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். படிக்கவும்… புதிய நிலை 0 new update January 2, 2024, 7:38 am IST திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. January 2, 2024, 7:37 am IST பிரதமர் மோடியை சந்திக்க உள்ள ஓபிஎஸ் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து ஆளுநர் ரவியுடன் ஒரே விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக சார்பில் பிரதமரை சந்திக்கவோ வரவேற்கவோ யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. January 2, 2024, 7:37 am IST பிரதமர் மோடிக்கு 7 இடங்களில் வரவேற்பு பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல, பாஜக சார்பில் 7 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விளம்பரம் First Published : January 2, 2024, 7:35 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.