LIVE-UPDATES

அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதாக இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு இன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இரு அவைகளிலும் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் இது தொடர்பான தீர்மானத்தை பாஜக எம்பிக்கள் சத்ய பால் சிங், பிரதாப் சந்திர சாரங்கி, சந்தோஷ் பாண்டே ஆகியோரும், மாநிலங்களவையில், பாஜக எம்.பி.க்கள் லக்ஷ்மண், சுதன்ஷு திரிவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் முன்மொழிய உள்ளதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பிரதமர் மோடி இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று இரு அவைகளிலும் ராம ராஜ்ஜியம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இரு அவைகளிலும் இன்று முக்கிய விவாதம் நடைபெற உள்ளதால் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவிட்டுளார். முகப்பு / Breaking and Live Updates / அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பாக விவாதம்.. இரு அவைகளிலும் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி... அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பாக விவாதம்.. இரு அவைகளிலும் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி... பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று இரு அவைகளிலும் ராம ராஜ்ஜியம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்… படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : February 10, 2024, 11:27 am IST Follow us on Published By : Premi KK தொடர்புடைய செய்திகள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதாக இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு இன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விளம்பரம் அதன்படி, இன்று இரு அவைகளிலும் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் இது தொடர்பான தீர்மானத்தை பாஜக எம்பிக்கள் சத்ய பால் சிங், பிரதாப் சந்திர சாரங்கி, சந்தோஷ் பாண்டே ஆகியோரும், மாநிலங்களவையில், பாஜக எம்.பி.க்கள் லக்ஷ்மண், சுதன்ஷு திரிவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் முன்மொழிய உள்ளதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பிரதமர் மோடி இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கத்தில் விடிய விடிய பஸ் கிடைக்காமல் தவித்த பயணிகள்… காரணம் என்ன? - போக்குவரத்து துறை கொடுத்த விளக்கம்! விளம்பரம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று இரு அவைகளிலும் ராம ராஜ்ஜியம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இரு அவைகளிலும் இன்று முக்கிய விவாதம் நடைபெற உள்ளதால் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவிட்டுளார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Budget 2024 , Ram mandir First Published : February 10, 2024, 8:26 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.