LIVE-UPDATES

'சிஸ்டர்' ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷ் - த்ரில்லர் படத்தில் யோகி பாபு, கிங்ஸ்

திட்டம் இரண்டு, புலிமடா போன்ற த்ரில்லர் படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷும், காமெடிப் படங்களில் நடித்து வரும் யோகி பாபுவும் இணைந்து த்ரில்லர் காமெடி படமொன்றில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சிஸ்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். சென்ற வருடம் தமிழ்ப் படங்களுடன், புலிமடா என்ற மலையாளப் படத்தில் ஜோஜு ஜார்ஜுடன் நடித்தார். இந்த வருடம் அஜயன்டெ ரெண்டாம் மோஷனம் மற்றும் ஹெர் ஆகிய மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க என மூன்று படங்கள் வெளியாகவிருக்கின்றன. புதிதாக சிஸ்டர் என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ரா.சவரிமுத்து இயக்கும் காமெடி த்ரில்லர் படமான இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிளேஸ் கண்ணன், ஸ்ரீலதா தயாரிக்க, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள், சேஷு, மாறன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். டைட்டில் டிசைனில் இருந்து சிஸ்டர் என்பது செவிலியர் என்று யூகிக்க முடிகிறது. செவிலியரான ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே கதை. கடந்த மாதம் தொடங்கிய படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முகப்பு / Breaking and Live Updates / 'சிஸ்டர்' ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷ் - த்ரில்லர் படத்தில் யோகி பாபு, கிங்ஸ்லி 'சிஸ்டர்' ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷ் - த்ரில்லர் படத்தில் யோகி பாபு, கிங்ஸ்லி ரா.சவரிமுத்து இயக்கும் காமெடி த்ரில்லர் படமான இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : January 11, 2024, 5:30 pm IST Follow us on Published By : Murugadoss C தொடர்புடைய செய்திகள் திட்டம் இரண்டு, புலிமடா போன்ற த்ரில்லர் படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷும், காமெடிப் படங்களில் நடித்து வரும் யோகி பாபுவும் இணைந்து த்ரில்லர் காமெடி படமொன்றில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சிஸ்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். சென்ற வருடம் தமிழ்ப் படங்களுடன், புலிமடா என்ற மலையாளப் படத்தில் ஜோஜு ஜார்ஜுடன் நடித்தார். இந்த வருடம் அஜயன்டெ ரெண்டாம் மோஷனம் மற்றும் ஹெர் ஆகிய மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க என மூன்று படங்கள் வெளியாகவிருக்கின்றன. விளம்பரம் புதிதாக சிஸ்டர் என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ரா.சவரிமுத்து இயக்கும் காமெடி த்ரில்லர் படமான இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிளேஸ் கண்ணன், ஸ்ரீலதா தயாரிக்க, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள், சேஷு, மாறன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். டைட்டில் டிசைனில் இருந்து சிஸ்டர் என்பது செவிலியர் என்று யூகிக்க முடிகிறது. செவிலியரான ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே கதை. கடந்த மாதம் தொடங்கிய படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Actor Yogibabu , Actress Aishwarya Rajesh , New movie First Published : January 11, 2024, 5:30 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.