LIVE-UPDATES

"பட்ஜெட் - மீண்டும் அல்வா" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அனைவருக்குமான பட்ஜெட் என்று பாஜக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கூறிவருகின்றன. அதே நேரம் எதிர்க்கட்சியினர் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என்று விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக்… தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அனைவருமே ஏமாற கூடிய வகையிலும், பாஜகவினரே அதிர்ச்சி அடையக்கூடிய வகையிலும் பட்ஜெட் உள்ளதாக கூறினார். இடைக்கால பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி அளிக்காமல் துரோகம் இழைக்கக்கூடிய, ஓரவஞ்சனை பட்ஜெட்டாக உள்ளதாகவும் பாலகிருஷ்ணன் கடுமையாக சாடினார். முகப்பு / Breaking and Live Updates / "பட்ஜெட் - மீண்டும் அல்வா" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் "பட்ஜெட் - மீண்டும் அல்வா" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் உதயநிதி ஸ்டாலின் 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார் படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : February 2, 2024, 8:41 am IST Follow us on Published By : Vijay Ramanathan Written By : Raja Rajendran தொடர்புடைய செய்திகள் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அனைவருக்குமான பட்ஜெட் என்று பாஜக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கூறிவருகின்றன. அதே நேரம் எதிர்க்கட்சியினர் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என்று விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். விளம்பரம் நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக்… — Udhay (@Udhaystalin) February 1, 2024 விளம்பரம் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அனைவருமே ஏமாற கூடிய வகையிலும், பாஜகவினரே அதிர்ச்சி அடையக்கூடிய வகையிலும் பட்ஜெட் உள்ளதாக கூறினார். இடைக்கால பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். விளம்பரம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி அளிக்காமல் துரோகம் இழைக்கக்கூடிய, ஓரவஞ்சனை பட்ஜெட்டாக உள்ளதாகவும் பாலகிருஷ்ணன் கடுமையாக சாடினார். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: budget , Budget 2024 , comment , Nirmala sitaraman , Udhayanidhi Stalin , VCK First Published : February 2, 2024, 8:41 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.