LIVE-UPDATES

கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.340-ஆக உயர்வு

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரையிலான சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயத்துக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், வரும் அக்டோபர் மாதம் முதல் கரும்புக்கான கொள்முதல் விலை, குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340-ஆக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள். இதே போன்று விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. செயற்கைக்கோள் உற்பத்தி மற்றும் செயல்பாடு, செயற்கைக்கோள் தரவு தயாரிப்பு உள்ளிட்டவற்றில் 76% வரை நேரடியாக அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எஞ்சியவற்றுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சுயசார்பு ஏற்படும் என்று தெரிவித்தார். இதனிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக கூறினார். முகப்பு / Breaking and Live Updates / கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.340-ஆக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.340-ஆக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : February 22, 2024, 7:58 am IST Follow us on Published By : Premi KK தொடர்புடைய செய்திகள் கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரையிலான சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயத்துக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. விளம்பரம் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், வரும் அக்டோபர் மாதம் முதல் கரும்புக்கான கொள்முதல் விலை, குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340-ஆக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள். இதே போன்று விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையும் படிங்க: கோடைக் காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில்… 2 மாவட்டங்களில் 100 டிகிரியை தொட்டது.. விளம்பரம் செயற்கைக்கோள் உற்பத்தி மற்றும் செயல்பாடு, செயற்கைக்கோள் தரவு தயாரிப்பு உள்ளிட்டவற்றில் 76% வரை நேரடியாக அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எஞ்சியவற்றுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சுயசார்பு ஏற்படும் என்று தெரிவித்தார். இதனிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக கூறினார். விளம்பரம் Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Anurag Thakur , BJP First Published : February 22, 2024, 7:58 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.